tamilnadu

img

அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளை போலவே அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் இந்திய இறங்கியுள்ளது.

இந்தியா, ஆயுத உற்பத்தியில் அடுத்த கட்டத்தை எட்டும் நோக்கத்திலே ஹைபர்சோனிக் எனப்படும் அதிநவீன ஏவுகணையை தயாரிக்க இறங்கியுள்ளது. இந்த ஏவுகணையானது ஒலியை விட 5 மடங்கு வேகமாக பயணிக்கக்கூடியது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா, உள்ளிட்ட நாடுகள் ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிப்பதில் தீவிர கவனத்தில் உள்ளன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. மேலும் இந்த ஏவுகணைகள் தான் எதிர்காலமென பாதுகாப்பு துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் ஒலியை விட வேகமாக செல்லக் கூடியதும், ஏவுகணை தடுப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ளக் கூடியதும் மற்றும் இதை ட்ராக் செய்ய இயலாது என கூறியுள்ளனர்.