முசாபர்பூர்:
பீகாரில் கடந்த 4 நாட்களில் மட்டும் 47 குழந்தைகள் உயிரிழந் துள்ள நிலையில், ‘ஹேப்போ க்ளிசிமியா’ குறைபாடு பற்றிய விழிப்புணர்வு இல்லாததே குழந்தைகள் இறப்புக்குக் காரணம் என்று மாநில அரசு பழிபோட்டுள்ளது.
முசாபர்பூரில் உள்ள கெஜ்ரிவால் குழந்தைகள் மருத்துவ மனையில் மொத்தம் 179 பேர் ஏ.இ.எஸ். வைரஸ் பாதிப்பினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரத்தத்தில் சர்க்கரை குறைவு, அம்மை நோய் உள்ளிட்ட குறைபாடுகளை ஏ.இ.எஸ். பாதிப்பு (Acute Encephalitis Syndrome - AES) என்று மருத்து வர்கள் கூறுகின்றனர். அதிக வெயில், வெப்பம், மழையின்மை போன்ற காரணங்களால் ஏ.இ.எஸ். பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில்தான், ஏ.இ.எஸ். பாதிப்பு ஏற்பட்டு, முசாபர்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் சிகிச்சை பலனின்றி கடந்த 4 நாட்களில் மட்டும் 54
குழந்தைகள் உயிரிழந்திருப்ப தாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது பீகார் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்க, ஐக்கிய ஜனதாதளம் - பாஜக கூட்டணி அரசு, நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்து ள்ளன. ஆனால், “ஹேப்போ க்ளிசிமியா என்ற நோய்ப் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பெற்றோர்களிடம் இல்லாததே, குழந்தை களின் உயிரிழப்புக்கு காரணம்” என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பழியைத் தூக்கி பெற்றோர் மீது போட்டுள்ளார்.