தஞ்சாவூர், பிப்.3- தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி குருதி நாள அறுவைத்துறையில், வயிற்றுப் பெருந்தமணி விரிவு (Abdominal Aortic Aneurysm) நோயால் கடும் முதுகுவலி மற்றும் எந்நேரமும் பிளவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் ஆபத்தில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட தஞ்சாவூர் மானோஜிப்பட்டி கிராமத்தின் விவசாய தொழிலாளி சுப்ரமணியன் (63) சிகி ச்சை அளிக்கப்பட்டு நலம் பெற்றார். இந்த சிகிச்சை முறை, தமிழக அரசு மருத்துவக் கல்லூரியில் செய்யப்படு வது இதுவே முதல் முறை. கார்ப்ப ரேட் மருத்துவமனைகளில் செய்யப் படும் இந்த மருத்துவ முறைக்கு ரூ. 10- 12 லட்சம் செலவு ஆகும். முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இதனை தஞ்சை மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் தலைமையில் குருதிநாள அறுவைத் துறை (Department of Vascular Surgery) மருத்துவர்கள் மருதுதுரை, மோகன்ராஜா, முரளி, கார்த்திகேயன், மயக்கவியல் மருத்துவர்கள் சாந்தி பால்ராஜ், குமரன், சமீர், ஜெயமுருகவேல், செவி லியர்கள் முத்துசாமி, சிவகுமார், லீமா, கேத்லேப் டெக்னீசியன் கணேச மூர்த்தி, செல்வராஜ், சுகப்ரியா, ‘குக்’ மருத்துவ உபகரண பிரிவின் பிரதிநிதி விமல் சாம், குருதி நாளத்துறை ஊழியர்கள் சங்கீதா, மகேஷ்வரி, துர்கா, கிட்டப்பா உள்ளிட்ட குழுவினர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.