tamilnadu

img

கூடங்குளம் அணு மின் நிலைய 4வது அலகுக்கான பாதுகாப்பு சாதனம்

ரஷ்யாவிலிருந்து கப்பலில் கொண்டுவரப்படுகிறது

சென்னை, டிச. 28- கூடங்குளம் அணு மின் நிலையத்தின் 4-ஆவது அலகுக்குத்  தேவைப்படும் முக்கிய சாதனங்களான – உயர் அழுத்த அணு  உலைக் கலன் மற்றும் மையக் கருவின் அதிநவீன பாதுகாப்பு  சாதனம் போன்றவற்றின் முழு இயந்திர தளவாடத் தொகுதி,  கூடங்குளம் நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்திலிருந்து, கப்பல் மூலம் இவை கொண்டு வரப்படுகின்றன. ரஷ்ய அரசின்  அணு மின் கழகமான ‘ரொசாட்டம்’ நிறுவனத்தின் இந்தியப்  பணிகளுக்கான முதல் துணை இயக்குநர்  அலெக்ஸாண்டர் க்வாஷா இதுகுறித்து கூறுகையில், ரஷ்ய வடிவமைப்பில் உருவாகும் அதிநவீன அணு மின் நிலையங்களில் முக்கிய  செயலாற்றும் பாதுகாப்புச் சாதனங்களில் ஒன்று ‘கோர் மெல்ட் லொக்லைசேஷன் டிவைஸ் எனக் குறிப்பிடப்படும், கோர் கேட்சர்  ஆகும். இது ரஷ்ய அணு விஞ்ஞானிகளின் அதி நவீன படைப்பாகும்.

அணு உலையின் புறப் பாதுகாப்புக் கூட்டுக்கு வெளியே.  அடிப்பகுதியில், இந்தப் பாதுகாப்பு அமைப்பான ‘கோர்  கேட்சர்’ நிறுவப்படுகிறது. அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டால்  பாதுகாப்புக் கூட்டைத் தாண்டி வெளியேறும் பொருட்களைத் திரட்டும் நோக்கில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால்,  மிக அரிதாக ஒரு விபத்து ஏற்படும்போது அணு உலையின் மையக் கரு அதீத வெப்பத்தால் பாதிக்கப்பட்டு உருகி வழிந்தா லும் அதைத் திரட்டி, குளிர்வித்து அணுக்கதிர் வீச்சு பாதிப்பு கள் பரவாமல் பார்த்துக் கொள்ள இது வகை செய்யும். புற  தட்பவெப்பச் சூழலை நுண்ணறிவதன் மூலம், இது தானே  செயல்படத் தொடங்கிவிடும். அதனால், ‘ஆளில்லா நேர விபத்து’ என்பது போன்ற அச்சத்தைத் தவிர்க்கவும் இது உதவுவ தாக அவர் கூறினார்.