tamilnadu

img

பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த கோரிக்கை

வேடசந்தூர், மார்ச் 20-  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதியில் வேடசந்தூர், விட்டல்நாயக்கன்பட்டி, லட்சுமணம்பட்டி, காள னம்பட்டி, காக்காத்தோப்பு, கருக்காம்பட்டி, மினுக்கம்பட்டி, காசிபாளை யம், கல்வார்பட்டி, ஸ்ரீராமபுரம், சேணன்கோட்டை, சித்தமரம்நால்ரோடு உள்ளிட்ட கிராமப்பகுதியில் 35-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உள்ளன.  தனியார் நூற்பாலைகளில் ஒடிசா, பீகார், குஜராத் உள்ளிட்ட வெளி மாநில ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் மில் வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கிப் பணியாற்றி வருகின்றனர்.

தொழிலாளர்கள் முகக் கவசம் அணிந்து பணியாற்றுகிறார்களா? கைகளைக் கழுவி சுத்தமாக இருக்கிறார்களா? என்பது குறித்து மில்லுக்கு நேரடியாக சென்று சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். அதே போல சமீபத்தில் தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்று வேடசந்தூர் பகுதிக்கு வந்தவர்களுக்கு கொரோனோ பாதிப்பு உள்ளதா என்பது குறித்து சுகாதாரத்துறை கண்காணிக்க வேண்டும். வெளிமாநிலத் தொழிலாளர் களால்  கொரோனோ வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளுர் தொழிலா ளர்கள் பணியாற்றி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் வேடசந்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் நூற்பாலைகளை ஆய்வு செய்து கொரோனோ தடுப்பு நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.