அவிநாசி அருகே சேவூர் ஊராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ரமேஷ், கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோர் கொண்ட 6 குழுக்கள் அமைத்து சுகாதார ஆய்வு உபகரணங்களுடன் வீடுகள் தோறும் சென்று ஆய்வு செய்தனர். அப்போது வீடுகளில் உள்ள முதியோர், குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
மேலும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சளி, தொடர் இருமல் இருக்கிறதா என பரிசோதனை செய்து தேவையின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும், உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று குடும்பத்தினருக்கு அறிவுறுத்தினர். நாள் தோறும் 400 வீடுகளில் சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.