tamilnadu

img

திருக்கோவிலூரிலும் பெரியார் சிலை அவமதிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் உருவச்சிலை வெள்ளியன்று (ஜூலை 17) பிற்பகலில் சமூக விரோதிகளால் அவமதிக்கப்பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்  சார்பில்  திருக்கோவிலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். செந்தில், வட்ட செயலாளர் ஆர்.ராஜவேலு, நகர  செயலாளர் கே.விஜயகுமார், சிபிஐ நகர  செய லாளர் பஷிர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்ற னர். சமூக விரோதிகளை உடனே கைது செய்ய வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டது.  இதேபோல உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் கள்ளக்குறிச்சி மாவட்ட  செயலாளர் டி.ஏழுமலை தலைமை தாங்கினார். நகர செயலாளர் கே.தங்கராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.