tamilnadu

img

போதைப் பொருள் அபின் கடத்திய பாஜக நிர்வாகி கைது

திருச்சி,ஆக.12- காரில் போதைப் பொருள் அபினை கடத்திய பாஜக மாவட்ட நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சியில் இருந்து ரூ.4.50 லட்சம் மதிப்புள்ள அபினை காரில் கடத்திய பெரம்பலூர் மாவட்ட பாஜக துணைத்தலைவர் அடைக்கலராஜ் உள்பட 5 பேர் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் சிக்கினர்.  கூட்டாளிகள் ஜெய பிரகாசம், சித்த மருத்து வர் மோகன்பாபு, பால சுப்பிரமணியன், சரவணன் ஆகியோரையும் காவல் துறையினர் கைதுசெய்த னர். திருச்சி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு காவல்துறையினர் 5 பேரை யும் கைது செய்து, அபி னையும் பறிமுதல் செய்த னர்.  (ந.நி.)