tamilnadu

img

2020 மார்ச் மாதத்திற்குள் நாடுமுழுவதும் பாரத் பைபர் சேவை: பி.எஸ்.என்.எல்

சென்னை, அக். 28- ஓரிரு மாதங்களில் பாரத் பைபர் சேவை களை அதிகப்படியான நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் அளிக்கப்பட உள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ப்ராட்பேண்ட் சேவையில் பொழுது போக்கு அம்சங்களை உள்ளடக்கி வழங்கு வதின் மூலம் வாடிக்கையாளர்களுடைய ப்ராட்பேண்ட் பயன்பாட்டு அனுபவம் மேலும் வலுப்படுத்தப்படுகிறது. பாரத் பைபர் திட்டத்தில் 50எம்பிபிஎஸ் வேகத்தில்  500ஜிபி டேடா கிடைக்கிறது. மார்ச் 2020க்குள் பாரத் பைபர் சேவைகளை நாடு  முழுவதும் ஒரே கொடையின் கீழ் கொண்டு வர திட்டங்கள் உள்ளன என பி.எஸ்.என்.எல். நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.