வாஷிங்டன்
மனிதக் குலத்தை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் உலகில் இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 53,000-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில், 37,000-க்கும் அதிகமானோர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆறுதல் செய்தியாக 2 லட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், அதிக மக்கள் நெருக்கம் கொண்ட இந்தியாவிலும் கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் 2500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில், 72 பேர் பலியாகியுள்ளனர்.
சமூக பரவலாக மாறுவதற்குள் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர கண்காணிப்பில் உள்ள நிலையில், கொரோனா தொற்றைச் சமாளிக்க அவசர நிதியாக 1 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.7500 கோடி) நிதியினை வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது.