பெங்களூரு:
கர்நாடகத்தில் காலியாக இருக்கும் 15 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள்எம்எல்ஏ நாராயண கவுடா, கே.ஆர். பேட் தொகுதி பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.இந்த தொகுதியில் ஓராண்டுக்கு முன்புதான், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி சார்பில் நாராயண கவுடாவெற்றி பெற்றிருந்தார். ஆனால், தனது சொந்தக் கட்சியின் ஆட்சியையே கவிழ்க்கும் விதத்தில், எம்எல்ஏ பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அதே கையோடு பாஜகவிலும் ஐக்கியமானார். கவுடாவின் ராஜினாமா காரணமாகவே கே.ஆர். பேட் தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் வந்துள்ளது.மக்களைப் பற்றிய எந்த பயமும் இல்லாமல், மறுபடியும் கவுடாவே வேட்பாளர் ஆகியுள்ளார்.இந்நிலையில், நாராயண கவுடாதிங்களன்று வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றபோது, அவர்மீது சரமாரியாக செருப்புகள் வீசப்பட்டுள் ளன. நாராயண கவுடாவின் குடும்பத்தினர் மீதும் செருப்புகள் விழுந்துள்ளன. இதனால் வேட்புமனுத்தாக்கலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாராயண கவுடா மீதான செருப்புவீச்சையொட்டி, பாஜக சார்பில் போட்டியிடும் ‘கட்சித்தாவல்’ எம்எல்ஏக் களுக்கு, கர்நாடகத்தில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.