பெங்களூரு:
காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் தங்கைமகன் நவீன் (23), முகநூலில் பதிவிட்ட சர்ச்சைக் கருத்தால், பெங்களூருவில் உள்ள புலிகேசி நகரில் செவ்வாயன்று இரவு வன்முறை வெடித்தது. காவல்நிலையம், வாகனங்கள், எம்எல்ஏ-வின் வீடு அடித்து நொறுக்கப் பட்டன. தீவைப்பு சம்பவங்களும் அரங்கேறின. இதையொட்டி, காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி3 பேரை சுட்டுக் கொன்றது. தற்போது டிஜே ஹள்ளி, கேஜி ஹள்ளி ஆகிய இரு இடங்களில் 144 தடைச்சட்டம்அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையேதான், வன்முறை நடந்தபோது, ஷாம்புரா சாலையில் உள்ள அனுமன் கோயிலை, நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் மனிதச் சங்கிலி அமைத்து வன்முறைக் கும்பலை விரட்டியடித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.