tamilnadu

img

வாகனத்துறை மந்தநிலைக்கு ஓலாவும்,உபெரும் பெரிய காரணியாக இருக்காது-மாருதி

ஆட்டோமொபைல் துறை மந்தநிலைக்கு ஓலாவும்,உபெரும் ஒரு காரணியாக இருக்காது என மாருதி சுசுகி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாருதி இயக்குனர் ஸ்ரீவாஸ்தவா கூறியிருப்பதாவது,ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட மந்தநிலைக்கு ஓலா,உபெர் ஒரு பெரிய காரணியாக இருக்காது என தெரிவித்துள்ளார்.மேலும் ஓலா,உபெர் போன்றவை வாரங்களில் அலுவலகம் செல்ல மக்கள் பயன்படுத்துகின்றனர்.ஆனால் குடும்பங்களுடன் வெளியே செல்ல ஒரு கார் வாங்கும் பழக்கம் மக்களிடையே உண்டு, அதுதான் தற்போது குறைந்தது என்றார். இந்நிலையில் இதற்கு முழுக்காரணமாக பணப்புழக்க நெருக்கடி, பொருட்களின் விலை அதிகரித்தல், ஜிஎஸ்டி வரி போன்றவையே அடங்கும்.இதனால் மக்களின் வாங்கும் திறனில் குறைவு ஏற்பட்டு மோசமான மந்தநிலைக்கு தள்ளியுள்ளதாக கூறியுள்ளார்.