tamilnadu

img

மாருதி நிறுவன தொழிலாளர்கள் 3 ஆயிரம் பேர் வேலை இழப்பு!

புதுதில்லி;
இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை, வரலாறு காணாத சரிவைச் சந்தித்து வரும்நிலையில், முன்னணி நிறுவனமான மாருதி சுசூகி மட்டும் 3 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலையை விட்டு அனுப்ப முடிவுசெய்துள்ளது.அவர்களுக்கான ஒப்பந்தங் களை நீட்டிக்காமல் அப்படியே விட்டுள்ளது.இந்தியாவில் விற்பனையாகும் வாகனங்களில், மாருதி நிறுவன தயாரிப்புகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. சரியாகச் சொன்னால், இந்தியாவில் விற்பனையாகும் 50 சதவிகித கார்கள், மாருதி சுசூகி நிறுவனத்தால் தயாரிக்கப்படுபவை.ஆனால், அண்மைக்காலமாக நிலவும் பொருதார மந்த நிலை,இந்தியாவில் பெட்ரோல் - டீசல் வாகனங்களுக்கு விதிக்கப்படும் கூடுதல் ஜிஎஸ்டி, மோடி அரசின் மின்சார வாகனக் கொள்கை ஆகியவற்றின் காரணமாக, மாருதி நிறுவனத்தின் வாகன விற்பனை 30 சதவிகிதம் அளவிற்குசரிவைச் சந்தித்துள்ளது. கடந்த 9 மாதங்களாக இந்த பாதிப்பு தொடர்கிறது. இந்தியா முழுவதும் மாருதி சுசூகி நிறுவனத்தின் 300 டீலர்கள், தங்களின்நிறுவனத்தை மூடி விட்டனர்.இந்நிலையிலேயே, விற்பனைக்கான தேவை குறைந்திருப்பதால், உற்பத்திப் பிரிவில் பணியாற்றி வந்த 3 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்ப மாருதி நிறுவனம் முடிவுசெய்துள்ளது.மாருதி நிறுவனமானது, இனிவரும் காலங்களில், சிஎன்ஜி ரக எரிவாயுவை, எரிபொருளாகப் பயன்படுத்தும் கார்கள் மற்றும் ஹைப்ரிட்ரக கார்களின் உற்பத்தியில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாக அந்த நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார்கவா தெரிவித்துள்ளார்.