tamilnadu

img

30 ஆண்டுகளில் கோலா கரடி இனம் அழியும் - ஆய்வாளர்கள் எச்சரிக்கை

கோலா கரடியினம் 30 ஆண்களில் அழிந்து போகும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிந்தது. இந்த காட்டுத்தீயில் சிக்கி அப்பகுதியில் மட்டும் வாழும் அரிய வகை கோலா கரடி இனம் பாதிக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் அழிந்து போனதாக சிட்னி பல்கலைக்கழக பேராசிரியர் கிறிஸ்டோபர் டிக்மன் தெரிவித்துள்ளார். இந்நிலையில்  2050 ம் ஆண்டு வாக்கில் கோலா கரடிகளின் இனமே அழிந்து போகும் நிலை உண்டாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
இந்நிலையில் ஆஸ்திரேலிய மழைக்காடுகளில் காணப்படும் கொடிய விஷம் கொண்ட புனல் குழிச் சிலந்திகள் நெருப்பு காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்துள்ளன. இந்த வகைச் சிலந்திகள் கடித்தால் மனிதர்கள் உயிரிழக்க வாய்ப்புள்ளது என்பதால் இந்த வகைச் சிலந்திகளிடம் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு நார்த் வேல்ஸ் மாகாண அரசு எச்சரித்துள்ளது.