உலக புகழ்பெற்ற சிட்னி ஒபேரா ஹவுஸின் உள்ளே காஸ் குழாய் உடைந்து வாயு வெளியானதால் 500க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.
ஆஸ்திரேலியா நாட்டின் முக்கிய நகரமான சிட்னியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஒபேரா ஹவுஸினுள் கட்டிட வேலை நடந்து வருகிறது. சுமார் 3 மணியளவில் நிலத்தை தோண்டும் கருவி ஒன்று ஒபேரா ஹவுஸினுள் அமைக்கப்பட்டிருந்த சமையல் வாயு குழாய் ஒன்றை உடைத்ததால் கட்டிடத்தினுள் முழுவதுமாக வாயு பரவ ஆரம்பித்தது. இதனால், ஒபேரா ஹவுஸினுள் இருந்த 500க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மேலும், அதன் அருகே இருந்த உணவகங்களில் இருந்த மக்களும் அப்பகுதியை விட்டு வெளியேறினர்.
இதைத்தொடர்ந்து தற்காலிகமாக ஒபேரா ஹவுஸ் அமைந்துள்ள மேக்கொயரி வீதி மூடப்பட்டது. பின்பு சேதமடைந்த குழாய் சரிசெய்யப்பட்ட பின்னர் சுமார் 6 மணியளவில் திறக்கப்பட்டுள்ளது.