tamilnadu

img

உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 இன்றைய ஆட்டம்

வங்கதேசம் - இந்தியா

இடம் : பிர்மிங்ஹாம் 
நேரம் : பிற்பகல் 3 மணி  

வெற்றி   60%   40% வாய்ப்பு

இரு அணிகளை ஒப்பிடுகையில் இந்திய அணி சற்று பலமாக இருந்தாலும் கணிக்க முடியாத அணியாக வங்கதேசம் வலம் வருவதால் இந்த ஆட்டத்தில் வெற்றி, தோல்வி குறித்து எளிதாக ஆருடம் கூற முடியாது. 
மழை வாய்ப்பு 
பிர்மிங்ஹாம் நகரில் மழைக்கு வாய்ப்பில்லை. 19 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் வெயில் அடிக்கும். பிற்பகல் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
ஆடுகளம்
பந்துவீச்சைக் கவனமாகக் கணித்தால் ரன் வேட்டை நிகழ்த்தலாம். வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும். துடிப்பாக வீசினால் சுழற்பந்து வீச்சும் சுழலும். இரவு நேரங்களில் குளிர் சீதோஷ்ண நிலை இருக்கும் என்பதால் ஆடுகளம் உறங்காது.      
வாழ்வா? சாவா? பிரச்சனை 
புள்ளி பட்டியலில் இந்திய அணி 2-ஆம் இடத்தில் இருப்பதால் அந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக இருந்தாலும், 6 ஆட்டங்களில் தோல்வியை அறியாமல் 7-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியிடம் உதை வாங்கியது. இதனால் பயங்கர கடுப்பில் இருக்கும் இந்திய அணி வங்கதேசத்தைப் புரட்டி எடுக்கும் ஆவலுடன் களமிறங்குகிறது. ஆனால் வங்கதேச அணிக்கு இது மிகவும் முக்கியமான ஆட்டமாகும். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு குறித்து அதிர்ஷ்ட செய்தியாவது கிடைக்கும். தோற்றால் உடைகளை பேக்கிங் செய்து லண்டன் விமான நிலையம் செல்ல வேண்டும் என்பதால் இந்திய அணியை வீழ்த்த தீவிர பயிற்சியுடன் களமிறங்குகிறது.

சேனல்
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, 2, 3 HD (அனைத்து இந்திய மொழிகளிலும்) டிடி ஸ்போர்ட்ஸ்
இந்திய வானொலி (சிறப்பு அலைவரிசை) ஹாட் ஸ்டார் (கணக்கு இருந்தால் இலவசம், இல்லையென்றால் 5 நிமிடம் மட்டும்)