tamilnadu

img

ரக்பி உலகக்கோப்பை இன்று 3-வது இடத்திற்கான ஆட்டம்

விளையாட்டு உலகில் முரட்டுத் தனத்துக்குப் பெயர் பெற்ற  ரக்பி விளையாட்டின் 9-வது உலகக் கோப்பை தொடர் ஜப்பான் நாட்டில் நடை பெற்று வருகிறது.  தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த தொடரில் நியூஸிலாந்து, வேல்ஸ், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகள் மோதிய முதல் அரையிறுதி ஆட்டத்தில் (சனியன்று) இங்கிலாந்து அணி 19-7 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியது. வேல்ஸ் - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய 2-வது அரையிறுதி ஆட்டத்தில் (ஞாயிறன்று) தென் ஆப்பிரிக்கா அணி 19-16 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறியது.     சனியன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகள் கோப்பைக்குப் பலப்பரீட்சை நடத்தும் நிலையில், வெள்ளியன்று நடைபெறும் 3-வது  இடத்திற்கான ஆட்டத்தில் நியூஸி லாந்து - வேல்ஸ்  அணிகள் மோது கின்றன. இந்த ஆட்டம் டோக்கியோவின் அஜினோ மோட்டோ மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 2:30 மணிக்கு நடைபெறுகிறது. 

இந்தியாவில் நேரடி ஒளிபரப்பு உண்டா? 

ஆசியாவில் ரக்பி விளையாட்டு பிரபலம் இல்லை என்பதால் இந்தியத் தொலைக்காட்சியில் நேரடியாகக் காண முடியாது. இஎஸ்பிஎன் (ESPN) சேனல் இருந்தால் கண்டுகளிக்கலாம். அரசு கேபிளில் இந்த சேனல் கானல் நீரைப்போன்று எப்பொழுதாவது தான் வரும். இதனால் ரக்பி உலகக்கோப்பை  தொடரின் இறுதிக்கட்டத்தைக் காண்பதில் குடைச்சல் ஏற்படும்.