tamilnadu

img

தலித் மணமக்களின் திருமணத்தை நிறுத்த கோவிலை பூட்டிய சாதி ஆதிக்க சக்திகள் சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடும் கண்டனம்

அரியலூர், நவ.14- அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்தைச் சேர்ந்த நம்மங்குணம் கிராமத்தில் வசிக்கும் பழனியாண்டி - செல்வி ஆகியோரின் மகன் அருண் ஸ்டாலின். அரியலூர் மாவட்டம் மணக்குடி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் - மஞ்சுளா ஆகியோரின் மகள்  திவ்யாவுக்கும் திருமணம் சொக்க நாதபுரம் வரதராஜ பெருமாள் கோவி லில் நடத்துவதாக முடிவு செய்து பத்திரிக்கை அடித்து முறையாக கோவிலுக்கு செலுத்த வேண்டிய கட்ட ணத்தை செலுத்தி முன்பதிவு செய்யப் பட்டு உள்ளனர். இந்நிலையில் அங்கி ருக்கும் சாதி ஆதிக்க சக்திகள், இந்து  முன்னணியினர் தூண்டுதலின் பெய ரால் தலித் மக்கள், அந்த கோவிலில் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் கோவிலுக்கு அவர்களாக பூட்டு போட்டனர். திருமணத்தையொட்டி மண மக்களும், உறவினர்களும் ஞாயிறன்று காலை கோவில் முன்பு வந்த போது ஏழு பூட்டுக்கள் போடப்பட்டு இருந்தன. உடனடியாக இந்து அறநிலையத்துறை அதிகாரி பாலாஜி, செந்துறை தாசில்தார் தேன்மொழி, அரியலூர் மாவட்ட எஸ்பி சீனிவாசன் ஆகியோர் இந்து அற நிலையத் துறைக்கு தகவல் கொடுத்த னர். அதன் பெயரில் இந்து அற நிலையத் துறை அதிகாரி, வருவாய் அதி காரிகள், காவல்துறையினருடன் சாவி யாரிடம் இருக்கிறது என்று விசாரித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சாதி ஆதிக்க சக்தியினரிடம் இருந்த சாவியைப் பெற்றுக் கொண்டனர். இருப்பினும் இரண்டு சாவிகள் எங்களிடமில்லை என்று சாதி ஆதிக்க சக்தியினர் கூற, கோவில் அதிகாரி, காவல்துறை முன்பு பொதுமக்கள் பார்வையில் சாவி கிடைக்காத பூட்டுகளை உடைத்து விட்டு கோவி லுக்குள் அர்ச்சகர் மூலம் அதிகாரிகள் முன்னிலையில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. பின்னர் வேறு ஏதும் அசம்பாவிதங்கள் நடந்து விடாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பாதுகாப்பாக மணமக்களை சொந்த ஊரான நம்ப குணம் கொண்டுவந்துவிட்டனர்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                             கோவில் நிலத்தில் 
இதனை அறிந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.பத்மாவதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலாளர் கந்தசாமி ஆகியோர் நம்மகுணம் மணமகன் இல்லத்திற்குச் சென்று சம்பவம் பற்றி விசாரணை செய்த போது அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 68 ஏக்கர் நிலத்தினை ஆதிக்க சாதியினர் மட்டும் ஆண்டா ண்டு காலமாக பயன்படுத்தி வந்ததாக வும், நாங்களும் விவசாயம் செய்கின் றோம்; எங்களுக்கும் கொஞ்சம் நிலம் கொடுங்கள் என்று தலித் மக்கள் கேட்ட தன் காரணமாக எங்களுக்கு சரி நிக ராக வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்களா. அது ஒருபோதும் நடக்காது. நடக்கவும் விட மாட்டோம் என்று மிரட்டி உள்ளனர்.
அதிகாரிகளுக்கு நன்றி
இனி உங்களை நிம்மதியாக வாழ விட மாட்டோம் என்று ஆதிக்க சாதி யினரும் இந்து முன்னணியினரும் இந்த மாதிரி செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவ தாக தெரிகிறது. இந்து முன்னணியினர் மற்றும் ஆதிக்க சாதியினர்களையும் கைது செய்து அவர்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். இந்து முன்னணியினர், ஆதிக்க சாதியினர் பூட்டிய கோயிலை திறந்து உரிய நேரத்தில் இல்லாது போனாலும் இரண்டு மணி நேர தாமதத்திற்குப் பிறகு திருமணம் செய்து வைத்த மாவட்ட காவல்துறை எஸ்பி, செந்துறை காவல் நிலைய ஆய்வாளர், வரு வாய்த்துறை அலுவலர்கள், இந்து அற நிலையத் துறை அலுவலர் ஆகிய அனைவருக்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் நன்றியை தெரி விப்பதுடன், அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்களில் ஒரு பகுதியை தலித்துகள் விவசாயம் செய்வதற்கும் கொடுத்து உதவுமாறு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச்  செயலாளர் இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.             (ந,நி.)