அரியலூர், மார்ச் 3- அரியலூர் மாவட்டம் கீழகுடி யிருப்பு கிராமத்தைச் சேர்ந்த தங்க துரை மகன் தமிழரசன். இவர் பிளஸ்-2 படித்து வந்தார். இவர், கடந்த 2017 டிசம்பர் 12 ஆம்தேதி யன்று கடைக்கு சென்று டூவீலரில் வீடு திரும்பும் போது எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கு அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிவில் தமிழரசன் குடும்பத்தாருக்கு, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் 11 லட்சத்து 39 ஆயிரத்து 86 ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் உத்தரவிட்டது. ஆனால் குறிப்பிட்ட காலத்தில் இழப்பீடு வழங்கப்படாததால் விழுப்புரம் கோட்ட அரசு பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தர விட்டது. இதையடுத்து அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.