tamilnadu

img

ஜெயங்கொண்டத்தில் அறிவியல் இயக்க மாநாடு

ஜெயங்கொண்டம், நவ.5- அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளியில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாண வர்கள் பல்வேறு அறிவியல் படைப்பு களை பார்வைக்கு வைத்தனர்.  பிரபஞ்ச தெய்வீக பேராற்றல் பவுண்டேஷன் நிறுவனர் முத்துக் குமரன், மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு பேசுகையில், பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கையை பாதிக்காத வகையில் அறிவியல் படைப்புகளை படைக்க முன்வர வேண்டும். உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் மக்கள் பயன்பாட்டில் உள்ள ஏசி, பிரிட்ஜ்களில் உருவாகும் சிஎப்சி வாயுவிற்கு பதிலாக ஓசோனை  சிதைக்காத வகையில் பசுமை வாயுவை மாணவர் சமுதாயம் கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.  நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறி வியல் இயக்க மாநில செயலர் ஸ்டீபன் நாதன், மாநில செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன், அறிவியல் ஆசிரியர் செங்குட்டுவன், மாவட்ட தலைவர் பழனியப்பன் உட்கோட்டை பாலு ஆகியோர் சிறந்த அறிவியல் படைப்புகளை படைத்த மாணாக்கர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர். முன்னதாக மாவட்ட செயலாளர் சதீஷ் வரவேற்றார். பள்ளி முதல்வர் தனலட்சுமி நன்றி கூறினார்.