அரியலூர், அக்.10 - அரியலூர் மாவட்டம் முழுவதும் உள்ள மக்களுக்கு குடிமனைப் பட்டா, இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜெயங் கொண்டம் மற்றும் அரியலூரில் அக்டோபர் 18 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டம் ஜெயங்கொண்டம் திருச்சி - சிதம்பரம் சாலை யில் உள்ள பெருமாள் கோயில் அருகே விஏஓ அலுவலகத்தில் ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம் தலைமையிலும், அரியலூர் அண்ணாசிலை முன்பு அரியலூர் ஒன்றியச் செயலாளர் துரை.அருண் தலைமையிலும் நடைபெற உள்ளது. போராட்டத்தினை கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை எம்எல்ஏ-வுமான எம்.சின்னதுரை ஜெயங் கொண்டத்தில் தொடங்கி வைக்கிறார். அரிய லூரில், முன்னாள் எம்எல்ஏவும், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான கே.பாலபாரதி தொடங்கி வைக்கிறார். இதில் மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லி பாபு, மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண் டினா, அரியலூர் மாவட்ட செயலாளர் எம். இளங்கோவன் மற்றும் தலைவர்கள், பொது மக்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் அரியலூர் மாவட்டம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.