districts

img

ஜெயங்கொண்டத்தில் வேலைநிறுத்த ஆயத்தக் கூட்டம்

அரியலூர், மார்ச்15- பொதுத்துறை நிறுவனங்க ளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்தும் சிறு குறு தொழில் கள் மீது போடப்பட்ட ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்,  ஏழை குடும்பங்களுக்கு ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இம் மாத இறுதியில் அகில இந்தி வேலை நிறுத்தம் நடை பெறுகிறது. வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வது எனவும் வேலை நிறுத்தத்தில் அனைத்து பகுதி மக்களையும் பங்கேற்கச்  செய்வது என அனைத்து தொ ழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஜெயங் கொண்டம் கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்க அலுவல கத்தில் தொழிற்சங்க கூட்டு நட வடிக்கை  குழு கூட்டத்திற்கு விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர்  கே.மகாராஜன் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் வேலை  நிறுத்த நாளன்று இரண்டாயி ரத்திற்கும் மேற்பட்டோரை திரட்டி பொது வேலை நிறுத் தத்தை வெற்றிகரமாக  நடத்து வது என முடிவு செய்யப்பட்டது. முன்னதாக வேலை நிறுத்தத் தின் நோக்கத்தை வலியுறுத்தி 24, 25, 26 ஆகிய மூன்று நாட்கள் தா.பழூர், ஆண்டிமடம், ஜெயங் கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டச் செயலாளர் இளங்கோவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கள் ஆர்.மணிவேல், அ.கந்த சாமி,  சிஐடியு மாவட்டச் செயலா ளர் துரைசாமி, கண்ணன், ஏஐடியுசி தலைவர் தனசிங்,  எஸ்.என்.துரைராஜ், சுப்பிர மணியன், ஆர்.கொளஞ்சி, சேப்பெருமாள்,  மெய்யப்பன், உத்திராபதி, காளிமுத்து, தியாக ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.