அரியலூர், மே 25- அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி சொக்க லிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த விஜேய்ந்தி ரன் (32), மீன்சுருட்டி அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். இவரிடம் கடந்த 21-ஆம் தேதி அன்று சொக்கலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த தினக ரன் என்பவர் கடனுக்கு பெட்ரோல் கேட்டார். கொடுக்க மறுத்த விஜேய்ந்திரனை சாதி பெய ரை சொல்லி திட்டியும் அடித்தும் சென்று விட்டு, அடுத்து சற்று நேரத்தில் தனது ஊரு க்குச் சென்று ஆட்களுLன் வந்து விஜேய்ந்தி ரனை சரமாரியாக தாக்கி கொலை செய்து விடு வதாக மிரட்டிச்சென்றுள்ளார். இதனை தொடர்ந்து போலீசாரிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையறிந்து பாதிக்க ப்பட்ட விஜேய்ந்திரன் வீட்டுக்கு சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் இர.மணிவேல், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் மகா ராஜன், கட்சியின் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாதர் சங்க மாவட்ட துணை தலைவர் மீனா, மாதர் சங்க ஒன்றிய செயலா ளர் அம்பிகா, மாதர் சங்க ஒன்றிய தலைவர் மணியம்மாள் மற்றும் கொளஞ்சியம்மாள், பி.பத்மா ரங்கநாயகி ஆகியோருடன் சென்று அவரிடம் நடந்த சம்பவத்தின் விபரங்கள் அனைத்தையும் கேட்டு அறிந்தனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக காவல்துறையினருடன் பேசி உரிய நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி உரிய நியாயம் கிடைக்க வழி வகை செய்கிறோம் என்று உறுதி கூறினார்.