அரியானா மாநிலத்தில் நவம்பர் 30ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோன நோய் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இணையம் வழியாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, கொரோனா பாதிப்பு குறைந்த மாநிலங்களில் மாநில அரசுகளின் விருப்பத்துக்கேற்ப பள்ளி, கல்லூரிகளை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து, பா.ஜ.க ஆட்சி செய்யும் அரியானா மாநிலத்தில் நவம்பர் 16ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. திறக்கப்பட்ட சில தினங்களிலே 83 மாணவர்கள், 8 ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நவம்பர் 30ஆம் தேதி வரை பள்ளிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.