அமராவதி:
மக்களவைத் தேர்தலோடு, ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைப்பெற்றது. இதில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சியை வீழ்த்தி,ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.
இங்கு மொத்தமுள்ள 175 தொகுதிகளில், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மட்டும் 149 இடங்கள் வரை முன்னிலை பெற்றுள்ளது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் 25 இடங்கள் வரையே முன்னிலையில் உள்ளது.நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சி ஓரிடம் பெற்றுள்ளது.
இதன்மூலம், ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டியிடம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஆட்சியை இழந்த சந்திரபாபு நாயுடு, தற்போது அவரதுமகன் ஜெகன்மோகன் ரெட்டியிடமும் மீண்டும் ஆட்சியைப் பறிகொடுத்துள்ளார்.
ஜெகன்மோகன் ரெட்டி, மே 30-ஆம் தேதி ஆந்திரா முதல்வராக பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.மக்கள் தங்கள் மீது பெரும் நம்பிக்கையை வைத்து வாக்களித்து இருப்பதாகவும், அதை உணர்ந்து அடுத்த 6 மாதத்திலிருந்து ஓராண்டுக்குள் ஆந்திராவில் மிகப்பெரியமாற்றத்தை நாங்கள் ஏற்படுத்துவோம் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தலிலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியே பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.