tamilnadu

img

டிஜிட்டல் சேவை வரி தொடர்பாக இந்தியா மீது விசாரணை நடத்த அமெரிக்கா முடிவு

இந்தியா உட்பட 10 நாடுகள் மீது டிஜிட்டல் சேவை வரி தொடர்பாக விசாரணை நடத்த அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளது.

அமேசான், பேஸ்புக், கூகுள், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது வர்த்தக நாடுகள் அதிக டிஜிட்டல் சேவை வரியை விதிப்பது நியாயமான முறையில் இல்லை என்றும், தங்கள் நிறுவனங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாகவும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியா உட்பட 10 நாடுகள் மீது டிஜிட்டல் சேவை வரி தொடர்பாக விசாரணை நடத்த அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளது. தற்போது  இந்தியா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, துருக்கி,  ஆகிய நாடுகள் மீது விசாரணை நடத்தப்பட உள்ளன.