tamilnadu

img

அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியை ஏற்று கொள்ள முடியாது - டிரம்ப்

அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கிற நாடாக இந்தியா நீண்ட காலமாக உள்ளது. இதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.

கடந்த ஆண்டு, இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் உருக்கு, அலுமினிய பொருட்களுக்கான வரியை 25 சதவீதமாக அமெரிக்கா அதிகரித்தது. இதனால், இந்தியாவின் உருக்கு வர்த்தகம் பாதிப்புக்குள்ளானது. இதற்கு பதிலடியாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும், பாதாம், வால்நட் உள்ளிட்ட 29 வகையான பொருட்கள் மீது, கூடுதல் வரியை இந்தியா விதித்தது.

இது குறித்து, ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டின் போது, இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்நிலையில், “அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கிற நாடாக இந்தியா நீண்ட காலமாக உள்ளது. இதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று டிரம்ப் தனது டுவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.