tamilnadu

img

பிளாஸ்டிக் மாசுகளை குறைக்கும் ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சம்மதம் - ஐ.நா. தகவல்

பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்கும் ஒப்பந்தத்தில் கிட்டத்தட்ட உலக நாடுகள் அனைத்தும் சம்மதம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.


நேற்று ஐக்கிய நாடுகள் சபை உலகம் முழுவதும் பிளாஸ்டிக்கை ஒழுங்குபடுத்தக்கூடிய தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது. அதில் உலகம் முழுவதும் நாடுகளில் 186 நாடுகள் இணைந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. ஆனால், இந்த தீர்மானத்தில் அமெரிக்கா இணையவில்லை.


இந்த ஒப்பந்தத்தின் மூலம் உலகம் முழுவதும் நடைபெறும் பிளாஸ்டிக் வர்த்தகம் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கு நிலைக்கு வரும் எனவும், தற்போது பிளாஸ்டிக்கால் மாசடைந்து வரும் கடல் வளங்கள், உயிரினங்கள் மற்றும் நிலங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும் என ஐ.நா.வின் சுற்றுச்சூழல் நடவடிக்கையில் உள்ள ஒருவரான ரோல்ப் பேயட் தெரிவித்துள்ளார்.


ஐ.நா. உலகம் முழுவதும் உள்ள கடல்களில் 10 கோடி டன் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளதாகவும், அவற்றில் 80 முதல் 90 சதவிகிதம் நிலத்தை சார்ந்த இடத்திலிருந்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.