tamilnadu

img

இந்தியப் பொருளாதாரம் மேலும் மோசமாகும்... ஐக்கிய நாடுகள் அவை ஆய்வறிக்கை

புதுதில்லி:
2019-20 நிதியாண்டிற்கான, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (Gross domestic product - GDP) குறித்து, தரமதிப்பீட்டு நிறுவனங்கள் ஏற்கெனவே பல்வேறு கணிப்புகளை வெளியிட்டிருந்தன.‘பிட்ச்’ நிறுவனம் 4.6 சதவிகிதம், ‘மூடிஸ்’ 4.9 சதவிகிதம், ‘இந்திய ரிசர்வ்வங்கி’, ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ மற்றும் ‘ஐஎச்எஸ் மார்க்கிட்’ ஆகியவை 5 சதவிகிதம், ‘ஆசிய வளர்ச் சிவங்கி’ மற்றும் ‘கிரிசில்’ நிறுவனங்கள் 5.1 சதவிகிதம், ‘உலக வங்கி’ 6 சதவிகிதம், சர்வதேச நாணய நிதியமான ‘ஐஎம்எப்’ 6.1 சதவிகிதம் என்று 2019-20 நிதியாண்டிற்கான ஜிடிபி மதிப்பை கணித்துள்ளன.

கடைசியாக மத்திய அரசின் புள்ளியியல் அலுவலகமும் (Central Statistics Office - CSO) 2019-20 நிதியாண்டிற்கான இந்தியாவின் ஜிடிபி 5 சதவிகிதம்தான் என்று அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.இந்நிலையில், இந்திய பொருளாதாரம் 2019-20 நிதியாண்டில் 5.7 சதவிகிதமாகவே இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் அவையும், தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது மற்ற தரநிறுவனங்களின் கணிப்பை விட அதிகம் என்றாலும், இதே ஐக்கிய நாடுகள் அவை முன்பு 7.6 சதவிகிதம் என்று கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது ஆகும். தற்போது 1.9 சதவிகிதத்தை குறைத்துக் கொண்டுள்ளது.அதேபோல, 2020-21 நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவிகிதமாக இருக்கும் என்று முன்பு கூறியிருந்த ஐக்கிய நாடுகள் அவை, தற்போது அதனையும் 6.6 சதவிகிதமாக குறைத்துள்ளது.