அகமதாபாத்:
பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் மோடி தொடர்ந்த வழக்கில், குஜராத் பாஜக அரசுக்குஅகமதாபாத் உயர் நீதிமன் றம் அண்மையில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.குஜராத் மாநிலத்திலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு, ஒரு மாதத்திற்குத்தேவையான மண்ணெண் ணெய்யை அம்மாநில அரசுதவணை முறையில் வழங்கிவந்தது. ஆனால், ஜனவரி1 முதல், இந்த மண்ணெண் ணெய் தவணை முறையில் வழங்கப்படாமல் மொத்தமாக ஒரே தடவையில் வழங்கப்படும் என்று அறிவித்தது.
இது குஜராத் நியாயவிலைக் கடை உரிமையாளர்களுக்கு சிரமத்தை ஏற் படுத்துவதாக அமைந்தது. மொத்தமாக வழங்கப்படும் மண்ணெண்ணெய்யை சேமித்து வைக்க இடமில்லாததால், அரசின் முடிவுக்கு அவர் கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, குஜராத் மாநில நியாயவிலைக் கடை உரிமையாளர்கள் சங்கத் தலைவராக இருக்கும்- பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் மோடி, அரசின்முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித் தார். எனினும் பாஜக அரசு அதன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.இதையடுத்து, பிரகலாத் மோடி குஜராத் பாஜகஅரசுக்கு எதிராக அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், குஜராத் அரசு விளக்கம் அளிக்க வேண்டும்என்று அண்மையில் நோட் டீஸ் அனுப்பியுள்ளது.