tamilnadu

img

போராடும் மாணவர்களை போனில் அழைத்து மிரட்டல்... குஜராத் பாஜக அரசின் காவல்துறை அராஜகம்

அகமதாபாத்:
திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் மற்றும் குடியுரிமைப் பதிவேட்டிற்கு எதிராக, நாடு முழுவதும் நடைபெறும் போராட்டத்தையொட்டி, குஜராத் மாநிலத்திலும், அகமதாபாத் நகர் காந்தி ஆசிரமம், ஐ.ஐ.எம்.ஏ. குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் ஜான்சி ராணி சிலை உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.2019 டிசம்பரில், வெவ்வேறு நாட்களில் நடைபெற்ற இப்போராட்டங்  களில் ஆயிரக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் அகமதாபாத் போலீசார், இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களை அடையாளம் கண்டுஅவர்களை போனில் தொடர்பு கொள்கின்றனர் எனவும் அவர்கப் பற்றி விவரங்களைக் கேட்டு அச்சுறுத்துகின்றனர் எனவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.அகமதாபாத் சிறப்புக் காவல் பிரிவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தனக்கு போனில் அழைப்பு வந்தது எனவும் தன்னோடு பேசிய போலீசார் தனது முகவரி முதலிய விவரங்களைக் கேட்டதாகவும் மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார். “உண்மையிலேயே நான் மாணவன்தானா? என்றும் இப்போது கல்லூரியில் படிக்கிறேனா?” என்று போலீசார் விசாரித்ததாக அந்த மாணவர் குறிப்பிட்டுள்ளார்.காந்தி நகரைச் சேர்ந்த மற்றொருமாணவரும் தனக்கு கமிஷனர் அலு வலகத்திலிருந்து அழைப்பு வந்ததாக கூறியுள்ளார். இவரிடமும் பெயர், முகவரி முதலிய விவரங்களைக் கேட்டு“மாணவர்தானா?” என்று போலீசார் விசாரித்துள்ளனர்.இதனிடையே, “போலீசாரின் இந்தஅராஜகம் மாணவர்களைப் பயமுறுத்தும் வழிமுறையாகும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்த போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்காமல் இருப்பதற்கு செய்யப்படும் சதி” என்று சமூக ஆர்வலர் தேவ் தேசாய் குற்றம் சாட்டியுள்ளார்.