tamilnadu

img

தனது தாயையும், பெற்ற மகனையுமே வெட்டிக் கொன்ற கொடூரம் சாதி ஆணவக்கொலை குற்றவாளிக்கு 3 ஆயுள் தண்டனை!

தனது தாயையும், பெற்ற மகனையுமே வெட்டிக் கொன்ற கொடூரம் சாதி ஆணவக்கொலை குற்றவாளிக்கு 3 ஆயுள் தண்டனை!

கிருஷ்ணகிரி, நவ.15- சாதி மறுப்புத் திருமணம் செய்து  கொண்ட தனது மகனையும், ஆதர வாக இருந்த தாயையும் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தவருக்கு மூன்று ஆயுள் தண்டனையும், 10 மாத  சிறைத் தண்டனையும் விதித்து, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங் கரை அருகே உள்ள அருணபதி கிரா மம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் சுபாஷ் (28). திருப்பூரில் பனியன்  கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.  அங்கு, அவருக்கும் உடன் பணிபுரிந்து  வந்த - அரியலூர் மாவட்டம், உடையார்  பாளையம் வட்டம், கொல்லாபுரம் கிரா மம், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அனு சுயா என்பவருக்கும் காதல் மலர்ந்தது,  ஆனால், சாதி என்ற சுவர் இருவருக்கும்  இடையே எழுந்தது. மகனின் காதலுக்கு சாதியைக் கார ணம் காட்டி தண்டபாணி கடும் எதிர்ப்புத்  தெரிவித்தார். ஆனால், காதலில் உறுதி யாக இருந்த சுபாஷ், 2023 மார்ச் 27  அன்று, தனது தந்தையின் எதிர்ப்பை யும் மீறி அனுசுயாவை சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார். இளம்  தம்பதி புதிய வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினர். திருமணமாகி பதினைந்து நாட்கள்  மட்டுமே கடந்த நிலையில், சித்திரை மாதப் பிறப்பையொட்டி 2023 ஏப்ரல்  14 அன்று, சொந்த ஊரான அருணபதி  கிராமத்திற்கு, பாட்டி கண்ணம்மாவின் அழைப்பை ஏற்று, மனைவி அனுசுயா வுடன் சுபாஷ் சென்றார்.  காதல் மணம் புரிந்துகொண்ட தனது  மகன், கிராமத்திற்கு வந்ததை அறிந்த  தந்தை தண்டபாணி, சாதிவெறி தலைக் கேறிய நிலையில், கண்ணம்மாவின் வீட்டிற்குச் சென்று அங்கிருந்த மகன்  சுபாஷையும், அவரது காதல் மனைவி  அனுசுயாவையும் அரிவாளால் சரமாரி யாக வெட்டினார். இந்த கொடூரத்தைத் தடுக்க முயன்ற வயதான தனது தாய் கண்ணம்மாவையும் தாக்கினார். இதில், சுபாஷ், அனுசுயா, கண்ணம்மா  ஆகிய மூன்று பேரும் ரத்த வெள்ளத் தில் சரிந்தனர். இந்த சம்பவத்தில் சுபாஷும், அவ ரது பாட்டி கண்ணம்மாவும் உயிரிழந்த னர். ஆபத்தான நிலையில், அனுசுயா  ஊத்தங்கரை அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரிடம், ஊத்தங்கரை குற்றவியல் நடுவர் நீதி மன்ற நீதிபதி, மருத்துவமனைக்கே நேரில் சென்று வாக்குமூலம் பெற்றார். பின்னர், உயர் சிகிச்சைக்காக அனுசுயா கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அரசு மருத்துவர்களின் சிறப்பான மருத்துவ சிகிச்சை காரணமாக அனுசுயா உயிர் பிழைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய மாநிலச் செயலாளர் கே.  பாலகிருஷ்ணன், தீண்டாமை ஒழிப்பு  முன்னணி தலைவர்கள் கே. சாமுவேல்  ராஜ், இ. மோகனா உள்ளிட்டவர்கள், பாதிக்கப்பட்ட அனுசுயாவை மருத்துவ மனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். சுபாஷ் படுகொலை சம்பவத்தில், காவல்துறை உறுதியான நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என்று தமிழ்  நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக இயக்கங்களும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் தமிழகம் முழுவதும் கண்டன இயக்கங்களை நடத்தின. அதனடிப்படையில், காவல்துறை யினர் இந்த சம்பவம் குறித்து குற்ற எண்:  205/2023 எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை கள் தடுப்பு சட்டத்தில் 3(1)(ஆர்), 3(1)(எஸ்), 3(2)(வி) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், தப்பியோடிய தண்டபாணியை தீவிர தேடுதலுக்குப் பின் கைது செய்து சிறையில் அடைத்தனர். கிருஷ்ணகிரி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடை பெற்று வந்தது. இந்நிலையில், இவ் வழக்கில் இரண்டரை ஆண்டுகள் நடை பெற்ற விசாரணைக்குப் பிறகு, குற்ற வாளி தண்டபாணிக்கு மூன்று ஆயுள்  தண்டனை மற்றும் 10 மாதம் கடுங்காவல் தண்டனை ஆகியவற்றுடன் ரூ. 8,000  அபராதமும் விதித்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வி.ஆர். லதா,  2025 நவம்பர் 14 அன்று தீர்ப்பளித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட அனுசுயா வுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் நிவா ரணத் தொகை வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இளம்பெண் அனுசுயாவுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சாதி ஆணவப் படுகொலைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், இளைஞர் சுபாஷ்  வழக்கில், அவரது தந்தைக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது, சாதிவெறி சக்திகளுக்கு எதிரான முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநி லச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை விடுத்துள்ளார்.  அதில், “நீதிக்கான போராட்டத் தில் பாதிக்கப்பட்ட அனுசுயாவுக்கு அனைத்து வகையிலும் துணை நின்று சட்டப்போராட்டத்தை நடத் திய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கும், மார்க்சிஸ்ட் கட்சி யின் கிருஷ்ணகிரி மாவட்டக் குழு வுக்கும் பாராட்டுக்களை உரித்தாக்கு கிறோம். மருத்துவச் சிகிச்சைக்கு துணை நின்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட தோழர்களுக்கும், கல்வி தொடர உதவிகள் செய்த அகில இந்திய  இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்துக் கும் பாராட்டுக்கள்” என்று குறிப்பி டப்பட்டு உள்ளது. வழக்கைத் திறம்பட  நடத்திய வழக்கறிஞர்கள் அத்துடன், “வழக்கைத் திறம்பட நடத்திய அரசு சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ், அவருக்கு உறுதுணையாக இருந்த  வழக்கறிஞர்கள் டி. முரளி, கே. இளவரசன், என். நவீன், ஆர்.  அருள் ஆகியோருக்கும், சட்ட வழி காட்டல்கள் செய்து உதவிய சென்னை உயர்நீதிமன்ற வழக்கறி ஞர் கே.சி. காரல் மார்க்ஸ், எல்லா வற்றுக்கும் மேலாக நீதிக்கான போரா ட்டத்தில், மன உளைச்சல்களை எல்லாம் எதிர்கொண்டு, உறுதியை  வெளிப்படுத்தியுள்ள அனுசுயா வுக்கும் பாராட்டுக்களை உரித்தாக் கிக் கொள்கிறோம்” எனவும் தெரி விக்கப்பட்டு உள்ளது. சாதி ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட அனுசுயாவிற்கு அரசு  வேலை  வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாகவும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநிலக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிபிஎம் அலுவலகம் வந்த அனுசுயா சாதி ஆணவப் படுகொலை  செய்யப்பட்ட சுபாஷ் வழக்கில், வெள்ளிக்கிழமையன்று தீர்ப்பு வெளியான பின்னணியில், அவ ரது மனைவி அனுசுயா, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு  அலுவலகத்திற்கு சனிக்கிழமை யன்று வருகை தந்தார். நீதிக்கான  போராட்டத்தில் துணை நின்றதற்காக  கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் பொதுச் செயலாளர் பி.  சுகந்தி ஆகியோரிடம் தமது நன்றியறி தலை தெரிவித்துக் கொண்டார். இந்த  சந்திப்பின்போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண் ணன், மாநிலக்குழு உறுப்பினர் வெ.  ராஜசேகரன், வடசென்னை மாவட்டச்  செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

நீதிக்காக துணை நின்றவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்! தீ.ஒ.மு. அறிக்கை

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநிலத் தலைவர் த. செல்லக் கண்ணு, பொதுச்செயலாளர் பி.  சுகந்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை யில், சுபாஷ் ஆணவப் படுகொலை செய்யப் பட்ட வழக்கில், நீதியை நிலைநாட்டுவதற்கான தொடர் போராட்டத்திற்கு துணை நின்ற ஜன நாயக இயக்கங்கள், அரசியல் கட்சிகளுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, இந்த வழக்கிற்கும் மருத்துவச் சிகிச்சைக்கும் உதவிய தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டக் குழுக்க ளுக்கும், இந்த வழக்கில், 9 அறுவைச் சிகிச் சைகளுக்கு இடையில் மனம் தளராமல் உறுதி யாக நின்று நீதிக்காகப் போராடிய அனுசுயா- விற்கும், வழக்கை திறம்பட நடத்திய அரசு  சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த வழக்கறி ஞர்கள் டி. முரளி, கே. இளவரசன், சாம்ராஜ், என்.  நவினா, கணேஷ், கோபி, ஆர். அருள் ஆகி யோருக்கும் பாராட்டைத் தெரிவித்துக் கொள்வ தாகவும், சாதி ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட அனுசுயாவிற்கு அரசு வேலை யும், வீடும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.