tamilnadu

img

தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்க! மோடி அரசுக்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்

தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்க! மோடி அரசுக்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்

புதுதில்லி, நவ.22- பாஜக தலைமையிலான ஒன்றிய அரசாங்கம், நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்புகளையும் தன்னிச் சையாக அமல்படுத்தி அறிவிக்கை வெளியிட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 29 தொழிலாளர் சட்டங்களை ஒழித்துக்கட்டிய மோடி அரசு இதுதொடர்பாகக் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்  டுள்ள அறிக்கையில் கூறப்பட்டி ருப்பதாவது: தொழிலாளர் சட்டத்தொகுப்பு கள் நான்கும், இதுவரை தொழி லாளர்களை ஓரளவிற்குப் பாது காத்து வந்த, கடும் போராட்டத்தி னால் பெறப்பட்ட 29 தொழிலாளர் சட்  டங்களை ஒழித்துக் கட்டுகின்றன. பல வரம்புகள் இருந்தபோதி லும், ஊதியங்கள், வேலை நேரம்,  சமூகப் பாதுகாப்பு, தொழிற்சாலை களில் பாதுகாப்பு, ஆய்வுக்கு  உட்படுத்தும் முறைமைகள் (Inspection–compliance mechanisms), மற்றும் தொழிலா ளர்களின் கூட்டுபேர சக்தி ஆகியவை ஓரளவுக்கு நடைமுறையில் இருந்  தன. சட்டங்களை எளிமைப்படுத்துவ தற்குப் பதிலாக, புதிய சட்டத் தொகுப்புகள் முதலாளிகளுக்குச் சாதகமான முறையில், தொழிலா ளர்கள் இதுநாள்வரை அனுபவித்து வந்த பல உரிமைகளை நீர்த்துப்  போகச் செய்யவும், ஒழித்துக்கட்ட வும் முற்படுகின்றன. போராட்டங்கள் கிரிமினல் குற்றங்களாக அறிவிப்பு தொழிலாளர் சட்டத்தொகுப்பு கள் வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டை அதிகரிக்கும் என்ற அர சாங்கத்தின் கூற்று முற்றிலும்  ஆதாரமற்றதாகும். மூலதனத்தின்  தாக்குதலுக்கு எதிராகத் தொழிலா ளர்களைப் பாதுகாப்பற்றவர்களாக மாற்றும் விதத்திலேயே இந்தச்  சட்டத்தொகுப்புகள் வடிவமைக்கழு ழுட்டு இருக்கின்றன. தொழிலாளர் உரிமைகளின் பல்வேறு அம்சங்களை உள்ளடகு குய அனைத்து அர்த்தமுள்ள விதி முறைகளும் இந்தத் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளில் ரத்து செய்யப்  பட்டிருக்கின்றன. இவற்றின் மூல மாகத் தேசிய மற்றும் சர்வதேச மூல தனத்தை ஈர்ப்பதே இந்த அரசாங்  கத்தின் நோக்கமாகும். மேலும்  தொழிலாளர்களின் வேலைநிறுத் தம் செய்யும் உரிமையைப் பறிக்க வும், தொழிலாளர் வர்க்கத்தின் எந்த வொரு கூட்டு நடவடிக்கையையும் கிரிமினல் குற்றமாக்கவும் இந்தச் சட்டத்தொகுப்புகள் வகை செய் துள்ளன. கார்ப்பரேட் காட்டாட்சிக்கு வழிவகுக்கும் சட்டங்கள் தொழிலாளர் சட்டத்தொகுப்பு கள், ஒட்டுமொத்தமாக, அரசாங் கம் மற்றும் நிர்வாகத்தின் ஆதரவு டன் தொழிலாளர்களின் உரிமை களை துவம்சம் செய்து, கார்ப்ப ரேட்டுகளுக்கு ஒருதலைப்பட்சமான அதிகாரங்களை அளிப்பதன் மூலம் ஒரு காட்டாட்சியை (Jungle Raj) நிறுவ முயற்சிக்கின்றன. இந்தச் சட்டத்தொகுப்புகள் அனைத்தையும், சம்பந்தப்பட்ட வர்களுடன், குறிப்பாகத் தொழிலா ளர்களுடன் உண்மையான முத்  தரப்பு ஆலோசனை இல்லாமல், ஜன நாயக மற்றும் கூட்டாட்சி விதிமுறை களை மிக மோசமாக மீறி அமல் படுத்த முன்வந்திருப்பதை, அரசி யல் தலைமைக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அனைத்து ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்! அரசாங்கம் இந்தச் செயல்முறை முழுவதும் தொழிற்சங்கங்களை ஓரங்கட்டிவிட்டு, நாடாளுமன்றத் தில் எவ்வித விவாதமும் இன்றி அவ சர அவசரமாக இவற்றை நிறை வேற்றியது. இவை தொழிலாளர் நலன்களுக்கு எதிரானவை என்று  உறுதியான ஆவண ஆதாரங்களு டன் அளிக்கப்பட்ட ஆட்சேபனை களையும் அது ஆணவத்துடன் நிராக ரித்தது. இந்தத் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்துகிறது. மேலும் தொழிலா ளர் வர்க்கத்தின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், விரிவான அள வில் தொழிலாளர் உரிமைகளை  மீட்டெடுக்கவும், அரசாங்கத்தின் இந்த எதேச்சதிகார நடவடிக்கை களை முறியடித்திடவும், அனைத் துத் தொழிற்சங்கங்களும், ஜன நாயக சக்திகளும் ஓரணியில் திரண்டு  போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு அரசியல் தலைமைக் குழு அறிக்கையில் கூறியுள்ளது.                    (ந.நி.)

ஒன்றிய அரசின் முகவர்களான ஆளுநர்கள்! உச்சநீதிமன்ற விளக்கம் ஏமாற்றம் அளிக்கிறது!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அரசியல் தலைமைக்குழு வெளியிட்  டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: அரசியலமைப்புச் சட்டத்தின் 200-ஆவது பிரிவின் கீழ் ஆளுநர்களின் அதி காரங்கள் தொடர்பான, குடியரசுத் தலை வரின் குறிப்பு மீது உச்ச நீதிமன்றம் அளித்  துள்ள ஆலோசனை ஏமாற்றம் அளிக்கி றது. இதன்மூலம் ஒன்றிய அரசின் கை களில் அதிகாரங்கள் மேலும் குவிக்கப்படு வதால், உச்சநீதிமன்றத்தின் விளக்கம், மாநி லங்களின் உரிமைகள் மீதான தாக்குதலை  எந்த வகையிலும் தடுக்காது.  அதிகார அத்துமீறலுக்கு வழிவகுக்கக் கூடியது! மாநில சட்டமன்றத்தால் நிறைவேற் றப்பட்ட சட்டமுன்வடிவுகளைக் கையாள்  வதில் ஆளுநர்களுக்கு விருப்புரிமை அதி காரங்கள் உள்ளன என்றும், அவர்களுக்கு எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்க முடி யாது என்றும் கூறியிருப்பதானது, எதிர்க்  கட்சிகள் ஆளும் மாநிலங்களில், அரசியல மைப்புச் சட்டத்தைத் தாண்டி ஆளுநர்கள்  அதிகார அத்துமீறலில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும். குறிப்பாக, மாநில சட்டமன்றம் இரண்  டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய  சட்டமுன்வடிவிற்கு ஆளுநர் ஒப்புதல்  அளிக்க வேண்டியது கட்டாயம் இல்லை என்ற கருத்து பிற்போக்குத்தனமானது. இதன் மூலம், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, சட்டமுன்வடிவைக் காலவரை யின்றி ஆளுநர் தாமதப்படுத்தலாம்.  செயல்படாத தன்மைக்கு வரையறை என்ன? நிலுவையில் உள்ள ஒரு சட்டமுன்வடி வில் ஆளுநர் நீண்டகாலமாக செயல் படாத நிலையில், வரையறுக்கப்பட்ட அள வில் நீதித்துறை தலையீடு செய்ய முடியும்  என்பது மட்டுமே விளக்கத்தின் மூலம் கிடைத்த ஒரே நிவாரணமாகும். ஆனால்,  ஆளுநரின் நீண்டகால செயல்படாத தன்மை அல்லது மசோதா மீதான தாமதம்  என்பதற்கு எந்த வரையறையும் இல்லாத தால், இதுவும் தெளிவற்றதாகவே உள்ளது. எனவே, உச்ச நீதிமன்றத்தின் விளக்கம்,  ஒன்றிய அரசின் அரசியல் முகவர்களா கச் செயல்படும் ஆளுநர்களின் தன்  னிச்சையான செயல்பாடுகள், அரசியல மைப்பின்படி சரிதானா என்று சீர்தூக்கிப் பார்ப்பதாக அமையவில்லை. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. (ந.நி.)