கேரள மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்த கண்ணூர் பினராயி விஜயனுக்கு மாபெரும் வரவேற்பு
கண்ணூர், மார்ச் 18 -
சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத் திற்காக கண்ணூர் வந்த முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தங்களின் அன்புக்குரிய தலை
வரை வரவேற்பதற்காக, கண்ணூர் விமான நிலையத்திலிருந்து அவர் போட்டியிடும் தொகுதியான தர்மடம் வரை ஆயிரக்கணக்கான மக்கள், சாலையோரங்களில் காத்திருந்தனர்.
விமான நிலையத்தில் தரையிறங்கிய பினராயியை கட்சித் தொண்டர்கள் முழக்கங்களுடன் வரவேற்றனர். பின்னர் அவர் பயணம் செய்த வழி நெடுகிலும், பல இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள்
புடைசூழ தொண்டர்கள் உடன் சென்றனர். முதலமைச்சர் பினராயி விஜயனை பார்ப்பதற்காக மக்கள் பல மணி நேரத்திற்கு முன்பே சாலையின் இருபுறமும் திரண்டிருந்தனர்.
முதலமைச்சர் பல இடங்களில் தனது வாகனத்தை நிறுத்தி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு வழங்கப்பட்ட மாலைகளையும் பூங்கொத்துகளையும் அவர் அன்புடன் ஏற்றுக்கொண்டார்.
தர்மடம் நோக்கிய அவரது பயணத்தில், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட ஏராளமான மக்கள் பங்கேற்றனர். விமான நிலையத்திலிருந்து தர்மடம் வரை ஒவ்வொரு இடத்திலும் தொண்டர்கள் மற்றும் கட்சி சாராத
வர்களின் நீண்ட வரிசை காணப்பட்டது. இந்த வரவேற்பு, வரவிருக்கும் தேர்தல் போராட்டத்தில் தர்மடம் இடதுசாரிகளின் கோட்டையாகத் தொடரும் என்ற பிரகடனமாக அமைந்தது. கேரள மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக தர்மடம் வரவேற்பு இருந்தது.
