தோழர் என்.சங்கரய்யா நினைவு தினம்! சிபிஎம் கிளைகள் சார்பில் மாநிலம் முழுவதும் கடைப்பிடிப்பு
சென்னை, நவ. 15 - விடுதலைப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி தோழர் என். சங்கரய்யா வின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் சனிக்கிழமையன்று (நவ.15) கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தோழர் என். சங்க ரய்யாவின் உருவப் படத்திற்கு கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப் பினர் கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மாநி லச் செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் கள் பி.சுகந்தி, ஐ. ஆறுமுகநயினார், வெ. ராஜசேகரன், இரா. சிந்தன், ஆர்.சுதிர் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். கட்சியின் தென்சென்னை மாவட் டக்குழு அலுவலகத்தில் உள்ள தோழர் என். சங்கரய்யா உருவச் சிலைக்கு மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் நிகழ்ச்சி யில் பங்கேற்றனர். பல்லாவரம் பகு திக்குழு சார்பில் குரோம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே கவுன் சிலர் ஜி. விஜயலட்சுமி தலைமை யில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், தோழர் சங்கரய்யாவின் மகன்கள் எஸ். சந்திரசேகர், எஸ். நரசிம்மன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
சமரசமற்ற போராட்டத்திற்கு உந்து சக்தி தோழர் என்.எஸ்.!
சிபிஎம் மாநிலக்குழு அலுவல கத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், தோழர் என். சங்க ரய்யாவின் வாழ்க்கை வர லாற்றை நினைவு கூர்ந்து, அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றி னார். அப்போது அவர் கூறியதாவது: “இந்திய கம்யூனிஸ்ட் இயக் கத்தின் மூத்த தலைவராக திகழ்ந்தவர் என். சங்கரய்யா. மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக் கிய தலைவர்களில் ஒருவரான அவர், சாதியை மட்டுமல்ல மத மறுப்புத் திருமணம் செய்து கொண் டவர். அனைத்து மதம், சாதி களைச் சார்ந்தவர்களை உள்ள டக்கிய பெருமைமிகு குடும்பத் தைக் கொண்டவர். சாதி, மத மோதல்கள் நிகழும்போது, மகத் தான முழக்கங்களை உருவாக்கிய வர். இன்றும் துருவ நட்சத்திரமாக இருந்து நமக்கு வழிகாட்டுகிறார். ஒன்றிய பாஜக அரசானது, ஜனநாயகத்தின் அனைத்து அடிப்படை பண்புகளையும், கோட்பாடுகளையும் ஒழித்து பன்முகத்தன்மையை சீர்குலை த்து ஒற்றைத்தன்மையை கொண்டு வர முயற்சிக்கிறது. அடிப்படை உரிமைகளை பறித்து வருகிறது. தொழிலாளிகளின் உரிமைகளை பறிக்கும் மசோதா வை கொண்டு வர முயற்சிக்கிறது. எனவே, தோழர் சங்கரய்யா காட் டிய வழியில், பாஜக-வையும், அதோடு இணைந்துள்ள அதி முகவையும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்துகிற மகத்தான கடமையை நிறைவேற்றுவோம். அனைத்து மதச்சார்பற்ற கட்சி களோடு இணைந்து பணியாற்று கிற அதேநேரத்தில், உழைப்பாளி மக்களின் உரிமைகளுக்காக சம சமரசமற்ற போராட்டத்தையும் நடத்துவோம். தோழர் சங்கரய்யா வின் வாழ்க்கை வரலாறு அதற்கு உந்துசக்தியாக இருக்கும்; வழி காட்டும்.” இவ்வாறு கே.பாலகிருண் ணன் கூறினார்.
