மதுராந்தகம், ஜன.20- ஏரியை ஆக்கிரமித்து சாலை அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்திற்குட் பட்டது பழமத்தூர் கிராமம். இக்கிராமத்தில் ஏரியின் அருகே உள்ள விவசாய நிலங்களை சென்னையைச் சோர்ந்த தனி நபர்கள் சிலர் வாங்கி அதை வீட்டுமனை யாக மாற்றம் செய்யப்பட்டுள் ளதாகக் கூறப்படுகிறது. இந்த வீட்டுமனைக்கு செல்ல சாலை வசதி இல்லை. இதனால் ஏரியின் வழியாகச் சாலை அமைக்க முயற்சித்து வந்துள்ளனர். இதற்கு பழமத்தூர் கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். இது குறித்து பொதுப் பணித்துறை, மாவட்ட ஆட்சி யர் உள்ளிட்ட அதிகாரி களுக்கு கிராம மக்கள் மனு கொடுத்துள்ளனர். மேலும் பல போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். இந்நிலையில் ஞாயி றன்று இரவு ஏரியில் ஜேசிபி எந்திரம் வைத்து வீட்டுமனை நிலத்திற்குச் செல்ல சாலை அமைத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ஏரியில் சாலை அமைக்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி திங்களன்று (ஜன.20) சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த படாளம் காவலர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் இப்பிரச்சனை குறித்து மாவட்ட நிற்வாகத்திற்கு தெரிவித்து உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். பின்னர் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.