tamilnadu

செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை முக்கிய செய்திகள்

காலமானார்
செங்கல்பட்டு, ஜன.2- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு உறுப்பினர் மு.சீனிவாசன் அவர்களின் தாயார் சடைச்சியம்மாள் உடல்நலக்குறைவால் வியாழனன்று (ஜன.2) காலமானார்.  திம்மாவரம் அம்பேத்கர் நகரில் வைக்கப்பட்டிருந்த அன்னாரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் .இ.சங்கர், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் சார்லஸ், செயலாளர் அனுக்குமார், பொருளாளர் வரதன், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். அன்னாரது இறுதி நிகழ்வுகள் வெள்ளியன்று 1 மணிக்கு நடைபெறுகிறது.

கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலி
ஊத்துக்கோட்டை,ஜன.2- ஊத்துக்கோட்டை எட்டி குளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசபாண்டியன். இவர் ஊத்துக்கோட்டை சத்திவேடு ரோட்டில் பிஸ்கட் கடை நடத்தி வருகிறார். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள இவரது உறவுக்காரரின் மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா புதனன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக முருகேச பாண்டியன் தன் மனைவி பாக்கியலடசுமி (42), மகள் வைசாலி (17), மகன் மோனீஸ்வர் (12), தாய் தெய்வானை (65),  உறவினர் சீனிவாசன் (45) ஆகியோருடன் ஒரு வாடகை காரில் சென்னை வந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் இரவு ஊருக்கு புறப்பட்டனர். காரை முருகேசபாண்டியன் ஓட்டினார். நள்ளி ரவு 1 மணி அளவில் ஊத்துக்கோட்டை நகர எல்லையில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் அங்குள்ள கிருஷ்ணா கால்வாயில் கவிழ்ந்தது. விபத்தில் சிக்கிய வர்கள் காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தில்  இருந்தவர்கள் அங்கு ஓடி வந்து தண்ணீரில் விழுந்த வர்களை காப்பாற்ற முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்து ஊத்துக்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். காரில் இருந்த முருகேச பாண்டியன், பாக்கியலட்சுமி, மோனீஸ்வர், சீனிவாசன் ஆகியோரை காப்பாற்றினார்கள். தெய்வானை, வைசாலி ஆகியோர் தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: வியாபாரி கைது
அம்பத்தூர்,ஜன.2- ஓட்டேரி, எஸ்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் சமோசா வியாபாரி அப்துல் பஷீர். இவர் அதே பகுதியில் உள்ள தனது  நண்பர் வீட்டிற்கு புதனன்று சென்றுள்ளார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த நண்பரின் மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். அப்போது சிறுமி அலறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்துல் பஷீர், சிறுமியை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சிறுமி வீட்டில் இருந்த வார்னிசை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிறுமியின் உறவினர் தலைமைச் செயலக காலனி மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அப்துல் பஷீரை கைது செய்தனர்.

வருங்கால வைப்புநிதி  அலுவலக சிறப்பு முகாம்
சென்னை,ஜன.2 சென்னையில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் உங்கள் அருகில் வைப்பு நிதி என்ற சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2020 ஜனவரி மாதத்துக்கான ‘உங்கள் அருகில் வைப்பு நிதி’ சிறப்பு முகாம், வரும் 10ம் தேதி ஜனவரி மாதம் வெள்ளிக்கிழமை சென்னை ராயப்பேட்டை யில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, சந்தாதாரர்கள், ஓய்கூதியதாரர்கள், வேலை வழங்குவோர் தங்களது கோரிக்கை ஏதும் இருப்பின், மேற்குறிப்பிட்ட தேதியில் உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளு மாறு, வருங்கால வைப்பு நிதி அலுவலக சென்னை மண்டல ஆணையர் -1 ரித்துராஜ் மேதி கேட்டுக் கொண்டுள்ளார்.

;