tamilnadu

திண்டிவனம், வேலூர் முக்கிய செய்திகள்

அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆஜர்

திண்டிவனம், ஆக.19- நக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்கு தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்,  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். நக்கீரன் வார இதழில், சிலைக் கடத்தல் குறித்து  செய்தி வெளியிட்டது தொடர்பாக அந்த இதழின் ஆசிரியர் கோபால் மற்றும் தலைமை செய்தியாளர் தாமோதரன் பிரகாசுக்கு எதிராக அமைச்சர் சி.வி.சண்முகம், அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். கடந்த 8ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த  வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான பரிசீலனை திங்களன்று(ஆக.19) நடைபெற்றது. இதற்காக நீதித்துறை நடுவர் நளினி தேவி முன்பு  ஆஜராக அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு உத்தர விடப்பட்டது. இதை அடுத்து திண்டிவனம் ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவர் நளினிதேவி முன்பு சி.வி.சண்முகம் ஆஜரானார். அப்போது, இந்த வழக்கை தொடுத்ததற்கான காரணங்களையும், முகாந்திரங்களையும் அமைச்சர் விளக்கிக் கூறினார். அதிமுக வழக்கறிஞர்கள் மற்றும்  நிர்வாகிகள் அமைச்சர் உடனிருந்தனர்.

கல்வித் துறையில் அரசியல் தலையீடு அதிகரிப்பு  நிர்வாக அலுவலர் சங்கம் குற்றம்சாட்டு

வேலூர், ஆக.19- தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்  குழு கூட்டம் வேலூரில் நடைபெற்றது.  பள்ளிக் கல்வித் துறையின் உதவி யாளர் பணியிடத்தை பதவி உயர்வின்  மூலம் நிரப்ப வேண்டும் என்ற நேரடி  நியமனத்தை தவிர்க்க வேண்டுமென  கோரி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. பகுதி நேர துப்புரவாளர் பணி யிடங்கள் பதவி உயர்வின் காரண மாக காலியேற்படும் இடங்களை முறையான பணியிடமாக மாற்றி நிரந்தர துப்புரவாளர்கள் நியமிக்க வேண்டும், நிர்வாக மாறுதல் என்ற  பெயரில் அவ்வப்போது அமைச்சுப்  பணியாளர்களையும், ஆசிரியர் களையும் மாற்றம் செய்வதை ரத்து  செய்ய வேண்டும் என்றும் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டன.  இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தி யாளர்களிடம் பேசிய சங்க மாநிலப்  பொதுச் செயலாளர் பொன்.ஜெய ராம்,“பள்ளிக் கல்வித் துறையில் அர சியல் தலையீடு அதிகரித்துவிட்டது. அமைச்சுப் பணியாளர்கள் பணி முதல் ஆசிரியர்கள் இடமாறுதல் வரை அனைத்திலும் அரசியல் தலை யீடு உள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்றார். 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே  இடத்தில் பணியாற்றக் கூடாது என்று  பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தர விட்டுள்ளது. ஆனால், அந்தப் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் வேலை செய்து அலுவலகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார். மத்திய அரசின் புதிய கல்விக்  கொள்கை திட்டம் ஏழை மாணவர்கள்  கல்வி கற்க முடியாத நிலைமையை ஏற்படுத்தும். இதுதொடர்பாக, செப்  டம்பர் 10-ஆம் தேதி ஈரோட்டில் கருத்த ரங்கம், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயரவில்லை. ஸ்மார்ட் கார்டு மாணவர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை,”என்றார் அவர்.