tamilnadu

திண்டிவனம் மக்கள் அச்சப்பட வேண்டாம் எஸ்.பி. தகவல்

விழுப்புரம், ஆக.18- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதி வீடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரையப்பட்ட சந்தேகக் குறியீடுகள், இரவுக் காவல் பணியில் ஈடுபடும் கூர்க்காக்களால் வரையப்பட்டது எனக் கண்டறியப்பட்டுள்ளதால், மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று மாவட்டக் காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “திண்டிவனம் அருகே உள்ள கோபாலபுரம், காந்தி நகர் ஆகிய பகுதிகளில் சில தினங்களுக்கு முன்பு வீடு களின் மதில் சுவர்களில் பென்சிலால் வரையப்பட்டி ருந்த ரகசியக் குறியீடுகள் தெரிந்தன.  இதனால், பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில், கொள்ளையடிக் கும் நோக்கத்தோடு, அடையா ளம் காட்டும் வகையில், அந்தக் குறியீடுகள் வரையப்பட்டிருக்கலாம் என பரவலாகப் பேசப்பட்ட துடன், பொதுமக்களும் அச்சமடைந்தனர். இதனால், அந்தக் குறியீடுகள் வட மாநிலக் கொள்ளையர்களால் வரையப்பட்டிருக்கலாம் என சந்தேகித்து, போலீ ஸார் விசாரணை மேற்கொண்டனர். திண்டிவ னம் நகர, வட்டாரப் பகுதிக ளில் சில ஆண்டுகளாக இரவுக் காவலாளிகளாக (கூர்க்காக்கள்) பணிபுரிந்து வரும் நேபாளிகளான சந்திரா ஷா`ஹீ (56), அஜய்குமார் (30), சர்வேந்திரா சிங் (30) ஆகியோரை அழைத்து விசாரணை செய்ததில், இவர்கள் அந்தப் பகுதி  குடியிருப்புகளில் இரவு நேரங்களில் ரோந்து செல்வ தும், அதற்காக பகலில் வீட்டு உரிமையாளர்களிடம் பணம் வசூல் செய்வதும், பணம் பெற்ற வீடுகளில் மீண்டும் வசூலிக்காமல் இருப்பதற்கு பென்சிலால் அடையாளக் குறியீடுகளை வரைந்து வந்ததும் தெரியவந்தது.  இரவுக் காவலாளிகள் இதுபோல, மக்களை அச்சுறுத்தும் செயல்களில் மீண்டும் ஈடுபட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்து அனுப்பப்பட்டனர்.  இதனால், சந்தேகத்துக்குரிய குறியீடுகள், கொள்ளை யடிக்கும் நோக்கில் வரையப்பட்ட குறியீடுகள் என்று பொதுமக்கள் அச்ச மடையத் தேவையில்லை என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தெரி வித்துள்ளார்.