வியாழன், ஜனவரி 28, 2021

tamilnadu

img

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள முடச்சிக்காடு அரசு கலை

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள முடச்சிக்காடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள், சமத்துவப் பொங்கல் விழாவாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் நா.தனராஜன் தலைமை வகித்தார். தமிழ்த்துறை பேராசிரியர் ராணி, வணிகவியல் துறை பேராசிரியர் என்.பழனிவேல் மற்றும் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும், பானை உடைத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

;