சிதம்பரம், அக்.10- சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக விருந்தினர் விடுதி யில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி,“மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன ஜனா திபதி தோழர் ஜின்பிங் சந்திப்பு வரவேற்கத்தக்கது” என்றார். இரு நாட்டு தலைவர்களும் மாமல்லபுரத்தில் சந்திக்கும் நிகழ்ச்சியால் எல்லையோர சிக்கல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள் ளது. இந்த சந்திப்பு வெற்றிகரமாக அமைய வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
கீழடியில் கிடைத்த தொல்லி யல் சான்றுகள் தமிழ் சமூகத்தின் தொன்மையை பறை சாற்று கின்றது. 5 கட்ட அகழாய்வு நிறை வடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட அகழ்வாய்வுக்கு மத்திய அரசை நம்பி அகழ்வாய்வு செய்யக் கூடாது. நிதியை தமிழக அரசே ஒதுக்க வேண்டும். கீழடியில் கிடைத்த பொருள்களை அருங் காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி னார். தமிழகத்தில் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களை ஆணையம் அமைத்து மீட்க வேண்டும். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழ கத்தில் பணியாற்றும் என்எம்ஆர் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பல்கலைக் கழ கத்தில் படிக்கும் தலித் சமூக மாண வர்களிடம் கட்டாய கட்டண வசூல் செய்யக் கூடாது. இங்கு படிக்கும் தலித் மாணவர்களுக்கு வழங்கப்ப டும் சிறப்பு திட்டத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை பல்கலைக் கழக நிர்வாகம் செய்து வருகிறது. இதனை கைவிட வேண்டும் என்றும் திருமாவளவன் கேட்டுக் கொண்டார்.