tamilnadu

img

விரைவில் ஓய்வு பெறுகிறார் லியாண்டர் பயஸ்

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் (46) தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் பல்வேறு சாதனைகளைப் படைத்தவர். 1996-ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடரில் (ஒற்றையரில்) வெண்கலம் வென்று வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த லியாண்டர் பயஸ் இதுவரை 19 கிராண்ட்ஸ்லாம் பட்டம் (ஆடவர் இரட்டையர் - 9, கலப்பு இரட்டையர் - 10)  உள்பட மொத்தம் 44 பட்டங்களை வென்றுள்ளார். மேலும் 7 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ஒரே வீரர் (டென்னிஸ்) என்ற பெருமையும் லியாண்டர் பயஸுக்கு சொந்தம்.  இந்நிலையில், 2020-ஆம் ஆண்டில் சில டென்னிஸ் போட்டிகள் தமது கடைசி போட்டியாக இருக்கும் எனவும், அதன் பின்னர் ஓய்வு முடிவை அறிவிப்பேன் எனவும் தெரிவித்துள்ளதால் லியாண்டர் பயஸ் விரைவில் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.