tamilnadu

img

தட்டிக்கேட்ட வாலிபர் கொலை

ஊராட்சிமன்றத்  தலைவர் பதவி  ஏலம்

விருதுநகர், டிச.12- விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே கோட்டைப்பட்டியில்  ஊராட்சித்  தலைவர் பதவியை  ஏலம் விட் டதை  தட்டிக் கேட்டவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.  பண்ருட்டி அருகே நடுக் குப்பம் ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்திற்கும் துணைத் தலைவர் பதவி ரூ.15 லட்சத் திற்கும் ஏலம் விடப்பட்ட செய்தி அனைத்து பத்திரிகைகளிலும் வெளியானது. இதைத் தொடர்ந்து  விருது நகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள கோட்டைப்பட்டி யில் உள்ளாட்சித் தேர்தல் தொடர் பான ஆலோசனை கூட்டம் புதன் கிழமை இரவு நடைபெற்றது. கிராம மக்கள் பலர் கலந்து கொண் டுள்ளனர்.  ஊராட்சித் தலைவர் பொறுப்பிற்கு யார் போட்டியிடு வது? என்பது குறித்து விவாதம் நடைபெற்றுள்ளது. அதிமுக  கிளைச் செயலர்  ராமசுப்பு, ராம் குமார், சுப்புராஜ் உள்ளிட்ட சிலர் பெயரை தலைவர் பதவிக்கு சிலர் கூறியுள்ளனர். 

அப்போது அங்கு வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் சதீஷ்குமார் (27), எங்களை  கூட்டத்திற்கு அழைக்கா மல் நீங்களாகக் கூட்டம் நடத்தி முடிவு எடுக்கலாமா? எனக்   கேள்வியெப்பியுள்ளார். தனது அண்ணன் சுப்புராம் தேர்தலில் போட்டியிடுவதற்கு முறையாக விருப்ப மனு அளித்துள்ளதால் அவரையும் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து இருதரப்பி னரிடையே வாக்குவாதம் ஏற் பட்டது.  ஊராட்சித் தலைவர் பொறுப்பை ஏலம் விடக்கூடாது, யாராவது ஒருவர் போட்டியிட்டுக் கொள்ளலாம் என  சதீஷ்குமார் தெரிவித்ததாகக் கூறப்படு கிறது. இதனால் இருதரப்பின ருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.  ஒரு தரப்பினர், சதீஷ்குமாரை கடுமையாகத்  தாக்கியுள்ளனர்.   இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.  

 சதீஷ்குமாரின் உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.  ஊராட்சித் தலைவர் பொறுப்பை ஏலம் விட்டதை தட்டிக் கேட்டவர் அடி த்துக் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் கிடைத்ததும் ஏழா யிரம்பண்ணை காவல்துறை யினர் சென்று விசாரணை நடத்தி கோட்டைப்பட்டியைச் சேர்ந்த  ராமசுப்பு, முத்துராஜ், செல்வ ராஜ், சுப்புராம், கணேசன் உட்பட ஏழு பேரைக் கைது செய்தனர். ராம்குமார் உள்ளிட்ட சிலரைத் தேடி வருகின்றனர். அடித்து கொலை செய்யப் பட்ட சதீஷ்குமாருக்கு வயது 27. எம்ஏ படித்துவிட்டு, சிவகாசி யில் ஒரு வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது குடும்பம் மிக வறுமை யின் பிடியில் உள்ள நிலையில், உடல்நலம் குன்றிய தந்தை, தம்பி யின் படிப்பு, குடும்பச் செலவு என அத்தனையையும் சதீஷ் குமார்தான் கவனித்து வந்துள் ளார். சதீஷ்குமாரின் உடலை கட்டிப்பிடித்து குடும்பத்தினர் கதறியது காண்போரை கண் கலங்க செய்தது. இளைஞர் அடித்துக் கொல் லப்பட்டதால், கோட்டைப்பட்டி கிராமம் பதற்றத்தில் உள்ளது.. பாதுகாப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்! கடலூர், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்ட தாக ஏற்கனவே புகார்கள் எழுந் தன. இந்த நிலையில் விருதுநகரி லும், இப்படி மோதல் நடந்து கொலை வரை சென்றுள்ளது பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.