tamilnadu

img

குவாலியர் ரயில் நிலையத்தில் தீ விபத்து

மத்தியப்பிரதேச மாநிலத்தில் குவாலியர் ரயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.  

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் ரயில் நிலையத்தில் உள்ள உணவகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினர். உணவகத்தின் அருகே உள்ள பிளாட்பாரத்தில் நின்றிருந்த பயணிகளும் வெளியேறினர்.தகவலறிந்து சம்பவ இடதிற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளது. இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



;