tamilnadu

img

கௌசிகா நதியை பாதுகாக்க வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

கௌசிகா நதியை பாதுகாக்க வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

கோவை, ஜூலை 1- கௌசிகா நதியை பாதுகாத்திட வேண்டும் என எஸ்.எஸ்.குளம் மேற்கு  ஒன்றிய வாலிபர் சங்க மாநாடு வலியு றுத்தியுள்ளது. கோவை எஸ்.எஸ்.குளம் மேற்கு ஒன்றிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 25 ஆவது மாநாடு கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. முன்னதாக, இளைஞர்களின் வெண்கொடி பேர ணியை முன்னாள் ஒன்றியச் செயலாளர் எஸ்.துரைசங்கர் துவக்கி வைத்தார். சிவானந்தபுரத்தில் உள்ள ஆர்.வெங் கிடு நினைவகத்தில் நடைபெற்ற மாநாட் டிற்கு, மனோஜ் தலைமை ஏற்றார். ஒன் றிய துணைச் செயலாளர் விஜயகுமார் கொடியேற்றினார். மாநாட்டை வாழ்த்தி, வாலிபர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர்.கோபால், வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் எம்.தினேஷ் ராஜா, மாதர் சங்க ஒன்றியத் தலைவர் என்.சுமதி ஆகியோர் உரையாற்றினர். இதில், கௌசிகா நதியை பாதுகாத்திட வேண்டும். மதவெறி அரசியலில் இருந்து இளைஞர்களை பாதுகாத்திட வேண்டும். போதை கலாச்சாரத்தை தடுத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில், ஒன்றியத் தலைவ ராக மனோஜ், செயலாளராக முத்து  முருகன், பொருளாளராக ராஜேஷ் மற் றும் 13 பேர் கொண்ட கமிட்டி உறுப் பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்டச் செயலாளர் அர்ஜூன் நிறைவு ரையாற்றினார். முடிவில், எஸ்.மணி கண்டன் நன்றி கூறினார்.