tamilnadu

img

அவிநாசி மேம்பாலத்தில் கார்டர்களை பொறுத்தும் பணி நிறைவு

அவிநாசி மேம்பாலத்தில் கார்டர்களை பொறுத்தும் பணி நிறைவுஅவிநாசி மேம்பாலத்தில் கார்டர்களை பொறுத்தும் பணி நிறைவு

கோவை, ஜூலை 13- கோவையில் கட்டப்பட்டு வரும்  தென்னிந்தியாவின் மிக நீண்ட  பாலத்தில் ரயில்வே ஒத்துழைப்பு டன் நான்கு நாட்களில் கார்டர் களை இரண்டாம் கட்டமாக பொறுத்தும் பணிகள் நிறைவ டைந்தது. தென்னிந்தியாவின் மிக நீண்ட பாலம் கோவை - அவிநாசி சாலை யில் கட்டப்பட்டு வரும் நிலையில்,  அதன் முக்கிய கட்டுமான பகுதியில்  பணிகள் நிறைவடைந்தன. இது குறித்து தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையின் சிறப்பு திட்டங்கள் கோட் டப் பொறியாளர் சமுத்திரக்கனி கூறுகையில், கோவை சித்ரா பகுதி யிலிருந்து உப்பிலிபாளையம் பகுதி வரை, 10 கிலோ மீட்டர் தூரத் துக்கு மேல் கட்டப்படும் இந்த உயர் மட்ட மேம்பாலத்தின், ஹோப் காலேஜ் ரயில்கள் கடக்கும் உயர் மட்ட மேம்பாலப் பகுதி முக்கியத்து வம் வாய்ந்த பகுதியாகும். இப் பகுதியில் இரண்டாம் கட்ட ரயில்வே மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில், அதன்  பணிகள் ஆரம்பித்து விறு, விறுப் பாக முடிவடைந்தன. இந்த மேம் பால கட்டுமானத்தில் இந்த பகுதி  முக்கியமான பகுதி. ரயில்கள்  கடப்பதனால், ரயில்வே ஒத்துழைப் புடனும் ஒருங்கிணைப்புடனும், மேம்பால கட்டுமானப் பணிகள் ஆரம்பித்து நடைபெற்றது. குறிப் பாக, ஹைதராபாத்தில் ரயில்வே அங்கீகரித்த, வால்ஸ் அண்ட் பிரிட்ஜ் என்ற இடத்தில் “E 305”  என்ற சிறப்பு ரக இரும்புகளை கொண்டு 8 கார்டர்கள் தயாரிக் கப்பட்டன. 720 டன் எடை கொண்ட இந்த இரும்பு கார்டர்களை, தமிழ் நாடு நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் தர  ஆய்வு செய்த பின்னர் பொறுத்தப் பட்டுள்ளது. இரவில் 12:30 முதல் 1:30 மணி  வரையிலும், அதிகாலை 4:30 மணி  முதல் 5:30 மணி வரையிலும், ரயில் சேவை நிறுத்தப்பட்டு இரும்பு கார் டர்கள் பொறுத்தப்பட்டது. 1,000 டன்  எடை உள்ள இரண்டு ராட்சத கிரேன்களின் உதவியுடன், 4  நாட்களில் இந்த பணியை முடித் துள்ளோம். 350க்கும் மேற்மட்ட ஊழியர்கள் இப்பணியை செய்துள் ளனர். விரைவில் எஞ்சிய சில கட்டு மானப் பணிகளும் நிறைவடையும்” என தெரிவித்துள்ளார். ரயில்வே இரண்டாம் கட்ட முக்கிய மேம் பாலப் பணிகள் நிறைவடைந்த நிலையில், மேம்பாலம் விரைவில்  பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படு கின்றது.