அறந்தாங்கி அருகே கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெண் படுகொலை
மாதர் சங்கம் கடும் கண்டனம் அறந்தாங்கி, ஜூலை 17- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, காரணியானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பர்வீன் பானு(40). இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் பர்வின்பானு பசு மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து தனது இரண்டு பெண் குழந்தை களுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் செவ்வாய் அன்று அவர், கருங்குழிக் காடு கண்மாய் பகுதியில் மேய்ச்சலுக்கு மாடுகளை கொண்டு சென்றவர் இரவு வெகு நேரம் ஆகியும் வீட்டி ற்கு வரவில்லை. இரண்டு மகள்களும், உறவினர் களும் தேடினர். பின்னர், ஆவுடையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, கிராம மக்களும் உறவினர் களும் தேடுதலின்போது கால்கள் இழுத்துச் செல்லப் பட்ட தடயம் தெரிந்தது. உடனே காவல் நிலை யத்திற்கு தகவல் தெரி வித்தனர். காவல் துறை யினரும் உறவினர்களும் சென்று பார்த்தபோது கண்மாய் பகுதியில் பர்வின் பானு, கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இரத்த காயங்களுடன் நிர்வாணமாக்கப்பட்டும் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப் பட்டிருப்பது கண்டறியப் பட்டது. உடலை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர் பாக ஒருவர் கைது செய்யப்பட்டு காவல்துறை யினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில், புதன் அன்று பர்வீன்பானு வீட்டி ற்குச் சென்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் பாண்டிச் செல்வி, மாவட்டச் செயலாளர் சுசிலா, சிபிஎம் அறந்தாங்கி ஒன்றிய செய லாளர் நாராயணமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் தென்றல் கருப்பையா, மாதர் சங்க நிர்வாகிகள் அறந்தாங்கி ராதா, ஆவுடை யார்கோவில் ஒன்றிய தலைவர் நாகூரம்மாள் உள்ளிட்டோர், பர்வீன் பானு மகள்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் மாதர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, கணவர் இல்லாமல் இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்த பர்வீன் பானு, கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதற்கு, மாவட்டக் குழு சார்பாக கடும் கண்டனத்தை தெரிவிப்ப தோடு, குற்றவாளிகளை விரைந்து பிடித்து கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் மேலும், இரண்டு மகளுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும்; அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் கூறினர். குற்றவாளிகளை விரைந்து பிடித்து நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் மாதர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட் டம் நடத்தப்படும் என்று நிர்வாகிகள் அறிவித்தனர்.