tamilnadu

img

நிதிச்சட்டம் 2025 ஐ திரும்பப் பெறுக! ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநாடு வலியுறுத்தல்

நிதிச்சட்டம் 2025 ஐ திரும்பப் பெறுக! ஓய்வு பெற்றோர் நல அமைப்பு  மாநாடு வலியுறுத்தல்

கரூர், ஜூலை 17-  தமிழ்நாடு மின் ஊழியர் ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் கரூர் கிளையின் 9 ஆவது மாவட்டப் பேரவை, தோழர் பஞ்சரத்தினம் அரங்கத்தில் (சிஐடியு கரூர்  மாவட்டக்குழு கூட்ட அரங்கம்) கரூர் கிளையின் தலைவர் வெள்ளையன்  தலைமையில் நடைபெற்றது.  சங்க உறுப்பினர் மதியழகன் வரவேற்று பேசினார். சிஐடியு கரூர் மாவட்ட துணைத்தலைவர் எம். சுப்பிரமணியன் மாநாட்டை துவக்கிவைத்து உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் வி.பி. கந்தசாமி வேலை அறிக்கையை முன் வைத்துப் பேசினார். மாவட்ட பொருளாளர் தியாகராஜன் வரவு செலவு அறிக்கையை முன் வைத்துப் பேசினார்.  மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலசெயலாளர் கா. தனபால், கரூர் மாவட்டச் செயலாளர் நெடுமாறன், மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநிலச் செயலாளர் கோவிந்தராஜ்,  மின்வாரிய ஓய்வு பெற்ற நல அமைப்பின் மண்டலச் செயலாளர் காளியப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட பொருளாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.  ஓய்வூதியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற நிதிச் சட்டம் 2025-ஐ திரும்பப் பெற வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வாரியமே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய மாவட்ட தலைவராக வெள்ளையன், மாவட்டச் செயலாளர் வி.பி. கந்தசாமியும், மாவட்ட பொருளாளராக சேகர் உள்ளிட்ட 11 பேர் கொண்ட நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  நிர்மல் பள்ளி நிதியாக ரூ.2000, சிஐடியு மாவட்ட மாநாடு நிதியாக ரூ.1000 பேரவை கூட்டத்தில் வழங்கினர்.