தமிழரசனுக்கு வேலை கிடைத்து வட லூர் வந்தபோது ஐந்து வீடுகள் சேர்ந்து இருந்த ஒரு காலனியில் தான் குடியிருந்தான். வீடு மிகச் சிறியது.பத்தடி அகலமும் இருபத்தைந்தடி நீள மும் உடையது, வாயில் கதவை ஒட்டி இருந்த முதல் தடுப்பில்தான்அவன்,அவன் மனைவி, இரண்டு மகன்கள் என நால்வரும் படுத்து வந்தார்கள். நடுவில் உள்ள தடுப்பில் பொருள்களை வைத்திருந்தார்கள்.உற வினர்கள் வந்தால் அந்த இடத்தில்தான் படுக்க வேண்டும்.அதற்குப் பின்னே சிறிய சமையலறை.அதையடுத்து சுற்றுச்சுவர் மட்டும் போட்டு ஒரு பக்கத்தில் குளி யலறை, கழிப்பறை எனத் தடுத்து அதன் மேல் சிமென்ட் ஷீட் போட்டிருந்தார்கள். பத்தாண்டுகளுக்குப் பிறகு காலனி உரிமையாளர் அவரவர் இருக்கும் வீட்டை அவர்களுக்கே விற்று விட்டார்.அப்போது தமிழரசனும் அவன் இருந்த வீட்டை வாங்கினான்.யாராவது ஆண் உறவி னர்கள் வந்தால் அவர்கள் குளிப்பதற்காக வீட்டின் எதிரே உள்ள தோட்டப் பகுதியில் ஒரு சிறிய குளியலறையைக் கட்டினான்.அதன் அருகிலேயே கிணற்றையும் வெட்டியிருந்தான்.
அவன் மனைவியும் வேலைக்குப் போனவுடன் காலனியில் தனக்குப் பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து அந்த வீட்டையும் வாங்கினான்.இப்போது அந்த பழைய வீட்டின் மேற்கூரையை மட்டும் இடித்துவிட்டு தரையையும், மேற்கூரையையும் உயர்த்தி இரண்டு வீட்டையும் இணைத்து பெரிய வீடாகக் கட்டிவிட்டான்.எனவே, எதிரில் இருந்த குளியலறையை தட்டுமுட்டு சாமான்கள் போடும் இடமாக்கிக் கொண்டான். ஒருநாள் மண்வெட்டி எடுக்க அந்த அறையைத் திறந்தபோது அதில் எறும்பு, கரையான்,தவளை,பல்லி,கரப்பான் பூச்சி என அனைத்து ஜீவராசிகளும் குடியிருந்ததைப் பார்த்தவன் ‘சரி..நாளைக்கு இந்த அறையைச் சுத்தப் படுத்த வேண்டும்’ என்று முடிவெ டுத்தான். நல்ல வேளையாக அவன் வீட்டில் அவ்வப்போது வேலை செய்துவரும் தனபால் காலையிலேயே வந்துவிட்டான். அவனை வைத்துக் கொண்டு அறை யைச் சுத்தப்படுத்த ஆரம்பித்தான்.தன பால் கதவைத் திறந்து சிலவற்றை எடுக்கும்போது உள்ளே நாகப்பாம்பு உரித்த சட்டை கிடந்தது.சட்டையின் நீளமே ஐந்தடி இருக்கும்.அப்போதே தனபால் சொன்னான். “நல்ல பாம்பு சட்டை உரித்தி ருக்கிறது சார்...பாம்பு இங்கேதான் இருக்கும்” என்றான். அதைத் தமிழரசன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.எல்லாப் பொருள்களையும் ஒவ்வொன் றாக வெளியே எடுத்துப்போட்டான்.
பெரிய இரும்பு வாளி ஒன்று இருந்தது. அதன் உள்ளே பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள். சிறிய இரும்புப் பொருள்கள் இருந்தன. வாளியைத் தமிழரசனே வெளியே எடுத்து வைத்து மேலிருந்து ஒவ்வொரு பொருளாகக் கீழே எடுத்துப் போட்டான்.கடைசியில் கைவிடும்போது எதோ வழவழவென்று தட்டுப்பட அலறி யடித்துக் கொண்டு துள்ளிக் குதித்து பின்னே பாய்ந்தான்.பாய்ந்த வேகத்தில்” தனபால்.... இது உள்ளே நீ சொன்னது போலப் பாம்பு இருக்கிறது. அதன் மேலே என் கை பட்டுவிட்டது”என்றான்..தன பாலும் பதறிப்போனான். பெரிய கழியை எடுத்துக் கொண்டு தூர இருந்தவாறு வாளி யைச் சாய்த்தான்.அவ்வளவுதான் ஐந்தடி நீளமுள்ள கருநாகம் வெளியே வந்து வேகமாக ஓட ஆரம்பித்தது. தனபால் தூர இருந்தவாறே அதன் நடு முதுகில் ஒரு போடு போட்டான்.அதால் நகர முடியவில்லை என்றாலும் உடலைத் தூக்கிப் படமெடுத்து ஆடத் தொடங்கியது.பார்த்த தமிழரசனுக்கு பயத்தில் உடல் உறைந்து போனது. “நல்ல வேளையாக கொத்திவிடவில்லை.இன்று தப்பித்தது பெரிய ஆச்சரியம்” என்றான். இப்படிப் பழைய பொருள்களைச் சேமித்து வைத்திருக்கும் இடத்தைத் தூய்மை செய்யும்போது மிகமிக எச்ச ரிக்கையாகச் செயல்பட வேண்டும்.இயன்றவரைக் கையைப் பயன்படுத்தா மல் ஒரு நீண்ட குச்சியால் ஒவ்வொரு பொருளையும் தூரமாகத் தள்ளி சோதித்த பிறகே அதைத் தொட வேண்டும் என் பதை அன்று கற்றுக்கொண்டான்.நீங்க ளும் எச்சரிக்கையாக இருங்க குழந்தை களே!